தமிழ்நாட்டையே உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை.. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன்? கோவை காவல் ஆணையர் விளக்கம்..

covai gang rape

கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்‌. காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. 7 தனிப்படைகளும் ஆதாரங்களை சேகரித்து சில சந்தேக நபர்களை கண்டுபிடித்தோம்.. 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் குற்றவாளிகளை அடையாளம் கண்டோம்..

நேற்றிரவு சந்தேக நபர்கள் 3 பேரும் துடியலூர் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.. அப்போது விசாரணை அதிகாரி அங்கு சென்ற போது அந்த 3 பேரும் ஆயுதங்களை பயன்படுத்தி தனிப்படை போலீசாரை தாக்கிவிட்டு தப்பி சென்ற முயன்றனர்.. எனவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சதீஷ், குணா, கார்த்தி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.. இந்த 3 பேர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் காவல்நிலையங்களில் உள்ளன.. 3 பேரில் இருவர் சிவகங்கையை சேர்ந்தவர்கள், ஒருவர் மதுரையை சேர்ந்தவர்.. 3 பேரும் 15 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகின்றனர்.. போலீசார் பிடிக்க சென்ற போது 3 பேரும் சேர்ந்து தாக்கியதில் காவலர் சந்திரசேகருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது.. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. சமீபத்தில் ஒரு திருட்டு வழக்கில் சிறை சென்ற மூவரும் தற்போது ஒரு மாதமாக ஜாமீனில் வெளியே உள்ளனர்.” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

Breaking : 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.. ரிசல்ட் எப்போது?

Tue Nov 4 , 2025
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகான பொதுத்தேர்வு அட்டவணையை அவர் வெளியிட்டார்.. மேலும் பேசிய அவர் “ மார்ச் 2-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகள் மார்ச் 26 வரை நடைபெறும்.. தமிழ்நாட்டில் மார்ச் 11-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 6 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். தேர்தல் ஆணையத்திடம் […]
anbil mahesh

You May Like