கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்தபோது, தண்டவாளத்தைக் கடந்து சென்றுவிடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்தி சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில் ஓட்டுநர் சங்கர் மறுத்துள்ளார்.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் சின்னகாட்டு சாகை கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா சாருமதி, தம்பி செழியன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே பள்ளியில் சாருமதி 11 ஆம் வகுப்பும் தம்பி செழியன் 10 ஆம் வகுப்பும் அடித்து வந்துள்ளான். இந்த நிலையில் இன்று நடந்த விபத்தில் அக்கா தம்பி இருவரும் உயிரிழந்தனர். வேன் ஓட்டுனர் உட்பட பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கேட் கீப்பர் அலட்சியாமாக செயல்பட்டு தூங்கியதே விபத்துக்கு காரணம் எனக் கூறி பொதுமக்கள் சரமாரியான தாக்குதல் நடத்தினர். மேலும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து ரயில்வே தரப்பில் கூறப்படும்போது, “கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்தபோது, தண்டவாளத்தைக் கடந்து சென்றுவிடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்தி சென்றதே விபத்துக்கு காரணம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஓட்டுநர், கேட் திறந்து தான் இருந்தது.. இரயில் போய் விட்டது என நினைத்து வேனை இயக்கினேன் என அமைச்சர் கனேசனிடம் கூறியுள்ளார். அவர் பேசுகையில், இரயில்வே கேட் திறந்து தான் இருந்தது.. ரயில் போய்விட்டதாக நினைத்து தான் பள்ளி வேனை இயக்கினேன். தண்டவாளத்தை கடக்கும் போது கேட் கீப்பர் உள்ளிட்ட யாரிடமும் நான் பேசவில்லை என தெரிவித்தார்.
Read more: தஞ்சாவூர்: கார் மீது சரக்கு வாகனம் மோதி 4 பேர் பலி.. சுற்றுலா வந்த இடத்தில் சோகம்..!!