9 வயது சிறுமியை கொன்று 10 துண்டுகளாக உடலை வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரின் மவ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பழங்குடியின 9 வயது சிறுமி. இவர் கடந்த 29ஆம் தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மவுலி பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பிளாஸ்டிக் பைக்குள் சிறுமியின் உடல் 10 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய கமலேஷ் (20) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.