தொடர்ந்து மிரட்டி வந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இது தான்..! நகைப்பிரியர்கள் நிம்மதி..

gold jewelery

சென்னையில் இன்று தங்கம் விலை மாற்றமின்றி ரூ.81,200க்கு விற்பனை செய்யப்படுகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10,000-ஐ கடந்து, சவரனுக்கு ரூ.79,000ஐ தாண்டியது. பின்னர் கடந்த செவ்வாய் கிழமையும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.. அதன்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 81,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்..

இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை, ரூ.10,150க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.81,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : மொபைல் செயலியில் கடன் வாங்குவது எவ்வளவு ஆபத்தானது?. என்ன செய்ய வேண்டும்?. என்ன செய்யக்கூடாது?.

English Summary

Gold is being sold unchanged at Rs. 81,200 in Chennai today.

RUPA

Next Post

டிவி வாங்க போறீங்களா..? 23 ஆயிரம் ரூபாய் குறையப்போகுது..! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..

Thu Sep 11 , 2025
Are you going to buy a TV..? 23 thousand rupees is going to be reduced..! Wait a little..
tv 1

You May Like