நேற்று அதிர வைத்த தங்கம் விலை.. இன்று விலை குறைந்ததா? உயர்ந்ததா? நிலவரம் இதோ..

gold price prediction

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 81,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இடை இடையே சிறிதளவு தங்கம் விலை குறைந்தாலும், பெரியளவில் விலை குறையவில்லை..

இந்த நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது.

இந்த நிலையில் இன்று சென்னையில் சற்று தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.10,270க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 82,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.142க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,42,000க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..

RUPA

Next Post

செல்போன் வெடிக்க காரணம் இதுதான்.. தவிர்ப்பதும் தப்புவதும் எப்படி..?

Wed Sep 17 , 2025
This is the reason why cell phones explode.. How to avoid and escape..?
Smartphone Blast

You May Like