நடிகர் ரஜினி காந்த், பழம்பெரும் சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நீங்கா இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர்..
நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு பல்வேறு திரைப் பிரபலங்களும், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நடிகர் ரஜினி சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.