நளன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் வா வாத்தியார்.. இந்த படத்தின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.. இந்த படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் தாஸ் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ஞானவேல் ராஜா வாங்கிய கடனை செலுத்தாததால் இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.. ஞானவேல் ராஜா எப்போது கடனை செலுத்துவார் என்று பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிகள் “ ஞானவேல் ராஜாவுக்கு ஏற்கனவே நீதிமன்றம் பல முறை வாய்ப்பளித்துள்ளது.. எனவே மீண்டும் வாய்ப்பளிக்க தேவையில்லை. பணம் கொடுத்தவர் திரும்ப பெற நீண்டகாலம் காத்திருக்கிறார்.. ஞானவேல் ராஜா கடனை திருப்பி செலுத்த எந்த வித தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை.. நீதிமன்றம் ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்துள்ளது.. அதனை ஞானவேல் ராஜா தவறாக பயன்படுத்தி உள்லார்.. எனவே ஞானவேல் ராஜா கடன் தொகையை ஞானவேல் ராஜா முழுமையாக செலுத்தும் வரை படத்தை வெளியிடக் கூடாது. அனைத்து தளங்களிலும் படத்தை வெளியிட அனுமதி இல்லை..” என்று உத்தரவிட்டனர்..
இந்த நிலையில் ரூ.3.75 கோடியை செலுத்த பட நிறுவனம் தயாராக உள்ளதால் படத்திற்கான தடையை நீக்கக் கோரி ஞானவேல் ராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஞானவேல் ராஜாவுக்கு ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது.. எனவே கடனை திரும்ப செலுத்தாதால் ‘ வா வாத்தியார்’ படத்திற்கு விதித்த தடையை நீக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.. மேலும் வா வாத்தியார் படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்..
Read More : திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது பராசக்தி..! U/A சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு..! ரன் டைம் எவ்வளவு?



