சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பளித்த சுவாமிநாத குறித்த சர்ச்சைக்குரிய கருத்து அடங்கிய புத்தகம் நாளை தொடங்க உள்ள சென்னை புத்தக காட்சியில் விற்பனைக்கு வரவிருந்தது.. நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்த புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வேலூரை சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
புத்தக காட்சியில் இந்த புத்தக விற்பனையை அனுமதித்தால் அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதை போல் ஆகும் என்பதால் இந்த புத்தக விற்பனைக்கு அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது.. மேலும் இந்த புத்தகத்தை பறிமுதல் செய்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது..
இந்த வழக்கு இன்று அவசர வழக்காக தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது ” புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகள் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது.. இந்த புத்தக விற்பனைக்கு எப்படி வழங்கப்பட்டது. அறிவுசார் புத்தக காட்சியில் இதுபோன்ற புத்தகத்திற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது..” என்று தெரிவித்தனர்.
அப்போது அரசு தரப்பு “ புத்தக காட்சி அரசால் நடத்தப்படவில்லை பபாசி என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது. நீதிபதி சுவாமிநாதன் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் அடங்கிய புத்தகம் விற்பனைக்கு வராது.. அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று உறுதியளித்தது..
இதையடுத்த அந்த புத்தகத்தை பறிமுதல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. இந்த புத்தக பதிப்பாளர் கீழைக்காற்று பதிப்பதகத்திற்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.. இதுகுறித்து 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று பதிப்பகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்..



