கர்நாடக மாநிலம் பெங்களூரு கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த பிரவீன் மற்றும் சந்தனா தம்பதியினர், கடந்த மே 5-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு பிரவீன் தனது மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சந்தனா அதிர்ச்சியடைந்து, அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் உடல்ரீதியாக நலமாக இருப்பது தெரிய வந்தது. இருப்பினும், மன அழுத்தம் காரணமாக இந்த சிக்கல் இருக்கலாம் என பிரவீன் தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்த விவகாரத்தில் சந்தனாவின் குடும்பத்தினர் தலையிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி, சந்தனாவும் அவரது உறவினர்களும் பிரவீனின் வீட்டிற்கு வந்து, அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றதோடு, பிரவீனை வீட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.
பிரவீன், தன்னை திருநங்கை என சந்தனா அவதூறாகப் பேசியதாகவும், சொத்தை எழுதித் தரக்கோரி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து, பிரவீன் கோவிந்தராஜ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, சந்தனா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.