கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே கரம்பொடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (42). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மூங்கில்மடா பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் சந்தோஷ் பழகி வந்துள்ளார். இதையடுத்து, இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களின் பழக்கம் அந்த பெண்ணின் கணவர் ஆறுச்சாமிக்கு (45) தெரியவந்தது. இதையடுத்து, சந்தோஷிடம் இந்த கள்ள உறவை முற்றிலும் கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், அவர் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று இரவு, சந்தோஷ் வீட்டில் அந்த பெண்ணுடன் மீண்டும் உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், அந்த சமயத்தில் திடீரென ஆறுச்சாமி வந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுச்சாமி, அங்கிருந்த கம்பியை எடுத்து சந்தோஷை கடுமையாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அந்த இளம்பெண் தனது கணவர் மீது கொழிஞ்சாம்பாறை போலீசாரிடம் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.