ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பட்நாயக் (45). இவர், தனது குடும்பத்தின் 97 லட்சம் ரூபாய் கடன் சுமையை அடைப்பதற்காக துபாயில் பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து வருகிறார். இவரது மனைவி உமா பட்நாயக் (45) மற்றும் மகள் பிரியங்கா (16) ஆகியோர் சொந்த ஊரில் வசித்து வந்தனர்.
கணவர் வெளிநாட்டில் இருந்ததால், வீட்டு வேலைகளுக்கு உதவ வேண்டி, உறவினர் மகனான 25 வயதுடைய சுரஜ் பட்நாயக் என்பவரை ரமேஷ் வீட்டிற்கு அனுமதித்துள்ளார். சுரஜ், மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என உதவி செய்த நிலையில், தனிமையில் இருந்த உமாவுக்கும் சுரஜுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது. மகள் பள்ளிக்குச் சென்ற பிறகு வீட்டில் தனிமையில் உல்லாசம் அனுபவித்ததோடு, இரவிலும் சுரஜ் வீட்டில் தங்க ஆரம்பித்துள்ளார்.
ஒருநாள் இரவு, முனகல் சத்தம் கேட்டுத் திடீரெனக் கண் விழித்த மகள் பிரியங்கா, தனது அண்ணன் என்று நம்பிய சுரஜும் தாயும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தாள். உயிருக்கு ஆபத்து என உணர்ந்த அந்தப் பள்ளி மாணவி, எதுவும் தெரியாதது போல் மீண்டும் உறங்கினாள்.
மறுநாள் பள்ளியில் தனக்கு நெருக்கமான ஆசிரியை ரேகாவிடம் கண்ணீருடன் நடந்த அனைத்தையும் உருக்கமாகத் தெரிவித்தாள். ஆசிரியை ரேகா, உடனடியாக ரமேஷுக்கு துபாயில் தொடர்பு கொண்டு, பிரியங்கா மூலமாக அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினார். “அப்பா, அம்மாவும் சுராஜ் அண்ணனும் செய்வது துரோகம்பா! என்னால் இங்கு இருக்க முடியவில்லை, பயமாக இருக்கிறது!” என்று பிரியங்கா அழுது கதறினாள்.
இதனால் மனம் உடைந்த ரமேஷ், இரண்டு மாதங்கள் கழித்துதான் இந்தியா வர முடியும் என்ற நிலையில், மகள் எதை கண்டும் பயப்படாமல் வழக்கம்போல இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால், மனைவி உமா தனது கள்ளக்காதலை நிறுத்தவில்லை.
குடும்பக் கடனை அடைக்க ரமேஷ் அனுப்பிய பணத்தை உமா ஊதாரித்தனமாக செலவழித்து, காதலன் சுரஜுக்குப் புல்லட் பைக் மற்றும் 5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றைப் பரிசளித்துள்ளார். கடந்த 2 வருடங்களில் அனுப்பிய 60 லட்சம் ரூபாயில், 10 லட்ச ரூபாயை உமா செலவழித்ததுடன், மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் மட்டும் வங்கியில் இருந்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய ரமேஷுக்குக் காத்திருந்தது மிகப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், அவரது மனைவி உமா 4 மாதக் கர்ப்பிணியாக இருந்து தான். மேலும், வாட்ஸ்அப் செய்திகளைச் சோதித்தபோது, மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு சுரஜுடன் திருமணம் செய்து புதிய தொழில் தொடங்க இருவரும் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
உடனடியாக காவல்துறையில் ரமேஷ் புகார் அளித்தார். விசாரணையில் அனைத்தும் உறுதியானதைத் தொடர்ந்து, சுரஜிடம் இருந்து புல்லட் பைக் மற்றும் தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டன. மனைவி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், ரமேஷ் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த கள்ளக்காதல் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை அழித்ததோடு, 16 வயது மகளின் இதயத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. “எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார் அம்மா” என்று பிரியங்கா கண்ணீருடன் கூறுகிறாள். சரியான நேரத்தில் மகளின் தூக்கம் கலையாமல் இருந்திருந்தால், ரமேஷின் மொத்த உழைப்பும் வீணாகியிருக்கும். குடும்பத்தின் கடனை அடைக்க ரத்தத்தை வியர்வையாக சிந்திய கணவனுக்கு, உடல் தேவைக்காக மனைவி செய்த துரோகம் ஒடிசாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



