விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில் ரோகிணியின் உண்மை முகத்தை பற்றி தெரிந்துகொண்ட மீனா, அவரைப்பற்றிய ரகசியங்களை குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் திணறுகிறார். அதே நினைப்பில் வீட்டில் இருந்து பூ கொடுக்க சென்ற மீனா பூவையும், பணத்தை மாறி கொடுக்கவே, அவரது தோழிகள் அவரைப் பார்த்து உனக்கு என்ன ஆச்சு என கேட்கிறார்கள். அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார் மீனா.
இதையடுத்து மீனாவை பற்றி அவரது தோழிகள் முத்துவிடம் கூறுகிறார்கள். இதையடுத்து செல்வத்திடம் மீனா ஊருக்கு போய்விட்டு வந்ததில் இருந்து ஒருமாதிரி இருக்கிறாள் என புலம்புகிறான். அதற்கு செல்வம், கண்டிப்பா அங்கதான் எதாவது நடந்திருக்கும் என சொல்கிறார். உடனே முத்து, ஊரில் ஒரு சாமியார் மீனாவை பார்த்து ஊரைவிட்டு போயிடுனு சொன்னார். அதனால் மீனா பயத்தில் இருப்பாளோ என கூறுகிறான்.
அதற்கு செல்வம் எனக்கு தெரிந்த சாமியார் ஒருவர் இருக்கிறார். அவரிடம் மந்திரித்த கயிறு ஒன்றை வாங்கித் தருகிறேன். அதை கட்டினால் சரியாகிவிடும் என சொல்கிறார். இது ஒரு பக்கம் இருக்க தனியாக ஆபிஸ் போட்ட மனோஜ் தனக்காக தனி பிஏவை தேர்வு செய்கிறார். அதை பார்த்த ரோகிணி இப்போ எதுக்கு பிஏ. உனக்கு உறுதுணையா நான் இருக்கிறேனே.. அப்புறம் என்ன என்கிறாள்.
இதற்கு மனோஜ் நமக்கு குழந்தை பிறந்துவிட்டால் நீ வரமுடியாது, அதனால் தான் பிஸினஸை டெவெலப் செய்ய பிஏ நமக்கு தேவை என கூறுகிறார். இதனால் ரோகிணி நானே மீனாவிடம் சிக்கிவிட்ன். இவன் வேற இப்படி எல்லாம் கனவு காணுகிறானே என்று மனதிற்குள் புலம்புகிறாள். பின்னர் வீட்டுக்கு செல்லும் முத்து, மீனாவிடம் எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சு என சொல்கிறார்.
அதைக்கேட்டு மீனா ஷாக் ஆக.. தன்னைப்பற்றிய உண்மையை தான் முத்து கண்டுபிடித்துவிட்டாரோ என்று ரோகிணியும் அதிர்ச்சி அடைகிறார். அதன்பின்னர் தான் அந்த சாமியார் சொன்னதை நினைத்து தானே நீ அதிர்ச்சியா இருக்க என முத்து கேட்க, மீனாவும் ரோகிணியும் நிம்மதி அடைகிறார்.
Read more: ஒரு நாளைக்கு 2 சிகரெட்கள் குடிப்பது உங்கள் இதயத்தை சேதப்படுத்தும்; ஆபத்து 50% அதிகரிக்கும்..!



