தவெக மாநாட்டு திடலில் நடந்த அசம்பாவிதம்.. விஜய் புதிய அறிவிப்பு..!

Tvk Vijay 1

தவெக மாநாட்டுத் திடலில் கொடிக்கம்பம் விழுந்தது தொடர்பாக நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார்..

தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.. 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்திற்கு ராம்ப் வாக் மேடை என மதுரையே களைக்கட்டி உள்ளது..


இதனிடையே தவெக மாநாட்டு திடலில் நடப்பட்ட கொடிக் கம்பம் சாய்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.. 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்த போது அருகில் நின்றவர்கள் தள்ளிச்சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.. இந்த கொடிக்கம்பம் சாய்ந்த விழுந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் நொறுங்கியது.. கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முற்பட்ட போது அது சாய்ந்து விழுந்ததது.. இதனால் அங்கிருந்த தவெகவினர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்..

பொதுவாக இதுபோன்ற கொடிக்கம்பங்களை நிறுவும் போது யாரும் அங்கு நிற்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவது வழக்கம்.. ஆனால் தவெகவினர் இந்த கொடிக்கம்பம் நடும் நிகழ்ச்சியை ஒரு விழா போல் கொண்டாடி அருகில் நின்றுள்ளனர்.. எனினும் எதிர்பாராத விதமாக கொடிக்கம்பத்தை நிறுத்தக்கூடிய போல்ட்கள் சரியாக பொருத்தப்படாததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. நடிகர் விஜய் கொடியேற்றுவதற்காக நிறுவப்பட இருந்த இந்த கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததால் தவெகவின் அதிர்ச்சியில் உள்ளனர்..

இந்த நிலையில் தவெக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் விழுந்தது தொடர்பாக நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார்.. அசம்பாவிதம் நடந்தது தொடர்பாகவும், இது எப்படி நடந்தது என்பது குறித்தும் விஜய் கேட்டறிந்தார்.. மாற்று ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று விஜய் உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது..

Read More : தவெக மதுரை மாநாடு.. விதவிதமாக ரெடியாகும் ஸ்னாக்ஸ்! என்னென்ன இருக்கு தெரியுமா?

RUPA

Next Post

“என் புருஷன் ரொம்ப சித்ரவதை செய்யுறான்”..!! கள்ளக்காதலனுடன் வெப் சீரிஸ் பார்த்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!!

Wed Aug 20 , 2025
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெட்ஷீட் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம், ஒருவரது உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. சந்தோஷ் தேவி எனும் பெண், தன் கணவர் மனோஜ் இடமிருந்து நீண்டகாலமாக சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளார். மனோஜ் ஒரு இ-ரிக்‌ஷா ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தனது குடும்ப சூழ்நிலையால் மனம் நொந்துபோன சண்டோஷ் தேவி, தனது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரிஷி […]
Rape marital Rape

You May Like