நைசா பேசி தனியே அழைத்து.. சிறுமியை விடிய விடிய கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்..!! ஷாக் சம்பவம்..

Child Rape 2025

திருவிழாவிற்கு சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாட்டில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் திருவிழாவில் கலந்து கொள்ள சிறுமி நேற்று முன் தினம் தன் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்திருந்த ஒருவர் சிறுமியுடன் பேசி நன்றாக பேசி பழகியுள்ளார். அந்த நபர் சிறுமியிடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நிலையில் பின்னர் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே அந்த நபரின் மூன்று நண்பர்கள் இருந்த நிலையில் நான்கு பேரும் சேர்ந்து சிறுமியை மாறிமாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து குற்றவாளிகள் தப்பி சென்ற நிலையில், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதார். இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. ஏர் இந்தியா விமான விபத்து அறிக்கையில் இருந்த அந்த வார்த்தை குறிப்பிட்டு. உச்சநீதிமன்றம் கவலை..

English Summary

The incident of a girl who went to a festival being gang-raped has caused shock.

Next Post

குழந்தையின் கண்ணில் குத்திய சார்ஜர் பின்! சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள்..! 6 மணி நேரம் தாமதமான அறுவை சிகிச்சை.. பகீர் சம்பவம்!

Mon Sep 22 , 2025
விளையாட்டின் போது ஏற்பட்ட ஒரு சிறிய தவறு ஒரு குடும்பத்திற்கு பெரும் கவலையாக மாறியது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் அரங்கேறி உள்ளது.. காலை 11:30 மணியளவில், ஒன்றரை வயது ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​மொபைல் சார்ஜரின் பின் அதன் கண்ணில் குத்தியது.. உடனடியாக குழந்தையின் பெற்றோர் அவனை உள்ளூர் மருத்துவமனைக்கு விரைந்தனர், ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் அவனது நிலை மோசமாக இருந்ததால் போபாலுக்கு அனுப்பினர். மாலை […]
baby eye charger

You May Like