“ இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.. நம்மை விட்டால் யாராலும் செய்ய முடியாது..” சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அதிரடி..!

stalin assembly

மத்திய மாநில உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலை குழுவின் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.. அப்போது உரையாற்றிய அவர் “ மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை திமுக ஏற்றுள்ளது. மத்திய மாநில அரசின் உறவு குறித்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்க இருக்கிறோம்.. நிதி உரிமைக்காக இன்னனும் போராட வேண்டிய நிலை தான் உள்ளது. அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் மத்திய அரசு வைத்துள்ளது.


அனைத்து அதிகாரங்களை வைத்து கொண்டு ஏதேச்சதிகாரமாக செயல்படுகிறது மத்திய அரசு.. அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றிருக்க வேண்டும்.. மாநில அரசின் முக்கிய ஆதாரங்களை கூட அடுத்த்டுத்து ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றும் வேலையை மத்திய அரசு வேகமாக செய்து வருகிறது..

மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியானது குறைவாக பகிரப்படுகிறது.. இந்த இக்கட்டான சூழலில், ஒன்றியத்தில் கூட்டாட்சி மலர வேண்டும், மாநில சுயாட்சி அமைய வேண்டும்.. இத்தகையை தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும்.. கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டுள்ளது.. நாம் முயன்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியும்.. கூட்டாட்சி தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.

இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை, ஜிஎஸ்டி போன்றவற்றால் தமிழகம் சந்தித்து வரும் நெருக்கடிகளில் இருந்து மீள ஒரே மருந்து மாநில சுயாட்சி தான்.. அதனை அரசியலமைப்பு சட்டம் மூலம் மட்டுமே செய்ய முடியும்.. ஒன்றிய அரசும் மாநிலங்களும் போட்டியாளர்கள் அல்ல.. மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்துவோம்.. ஒன்றிய – மாநில உறவுகளை சம அளவில் மீட்டெடுக்க வேண்டும்.. நாம் தான் இதை செய்ய வேண்டும்.. நம்மை விட்டால் இதை செய்ய யாரும் இல்லை.. இது வரலாறு நமக்கு வழங்கி இருக்கும் வாய்ப்பு. வளர்க மாநில சுயாட்சி. உருவாகட்டும் இந்திய குடியாட்சி..” என்று தெரிவித்தார்..

Read More : திமுக உடன் கூட்டணி.. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முக்கிய முடிவு..! பரபரக்கும் தேர்தல் களம்..!

RUPA

Next Post

திருப்பதி பக்தர்களுக்கு இனி தரமான லட்டுக்கள் கிடைக்கும்.. TTD புதிய விதிகள்.. இனி கலப்படம் சாத்தியமில்லை..!

Wed Feb 18 , 2026
திருமலை ஸ்ரீவாரி லட்டுவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தரமான லட்டுகளை வழங்க திருப்பதி தேவஸ்தானம் TTD முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து TTD ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. லட்டு தயாரிப்பதிலும், திருப்பதி ஏழுமலையானுக்கு நெய் வாங்குவதிலும் பல மாற்றங்களைத் தொடங்கியுள்ளது. லட்டு மற்றும் நெய்யின் தரத்தை உறுதி செய்வதற்காக சோதனைகளை நடத்துதல், நெய் விநியோக நிறுவனங்களுக்கு […]
Tirupati Tirumala laddu 1

You May Like