அரசுப் பள்ளி மாணவன் பலியான விவகாரம்.. தந்தைக்கு அரசு வேலை.. போராட்டம் வாபஸ்!

thiruvallur student

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது..


இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

இந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் மாணவன் மோகித் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்ததாக அவர் தெரிவிதிதுள்ளார்.. உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், அவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்..

ஆனால் உயிரிழந்த மாணவன் உடலை வாங்க அவரின் குடும்பத்தினர் மறுத்தனர்.. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கக் கோரியும், ரூ.1 கோடி நிவாரணம் வழங்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

9 மணி நேரம் போரட்டம் நடந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.. இந்த பேச்சுவார்த்தையில் மாணவரின் தந்தைக்கு அரசு பணி வழங்க முடிவு எட்டப்பட்டது. மேலும் போராட்டத்தையும் வாபஸ் பெற்றனர். இதையடுத்து மோகித்தின் தந்தைக்கு, அரசு அலுவலக உதவியாளர் பணி ஆணையை அமைச்சர் முன்னிலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதால் மாணவனின் உடலை பெற்றுக்கொள்ள அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்..

Read More : எதற்காக அப்படி சொன்னீர்கள்? திருப்பரங்குன்றம் வழக்கு.. கொதிந்தெழுந்த நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன்!

RUPA

Next Post

கள்ளக்காதலுக்கு இடையூறு..!! குடும்பத்திற்கே உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்த பெண்..!! அடுத்து நடந்த திடுக்கிடும் சம்பவம்..!!

Wed Dec 17 , 2025
கேரளாவையே உலுக்கிய ‘ஜாலி ஜோசப்’ சயனைடு கொலை வழக்கு பாணியில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொல்ல முயன்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தை மறைக்கவும், தனது எல்லை மீறிய ஆசைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்த குடும்பத்தினரை ஒழிக்கவும் சைத்ரா என்ற அந்தப் பெண் மேற்கொண்ட விபரீத முயற்சி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெலூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரா என்பவரின் மனைவியான சைத்ராவுக்கு, […]
Sex 2025 2 2

You May Like