கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரனைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு விஜய்யின் பிரச்சார வாகனம் எடுத்து வரப்பட்டது.
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவின் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது..
கரூர் சிபிஐ அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகள், வீடியோகிராபர்கள், ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள், உரிமையாளர்கள் என 306 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சிபிஐ 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டது..
இந்த சூழலில் கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல்துறையினர், தவெக நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டது.. அதன்படி, கடந்த 30-ம் தேதி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் உள்ளிட்டோர் ஆஜராகினர்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகள் ஆஜராகினர்.. அவர்களிடம் தொடர்ந்து 2 நாட்கள் விசாரணை நடைபெற்றது.. இதையடுத்து விஜய்க்கு கூட சம்மன் அனுப்பப்படலாம் என்று கூறப்பட்டது.
இதனிடையே கரூர் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தடவியல் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்..
இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரனைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு விஜய்யின் பிரச்சார வாகனம் எடுத்து வரப்பட்டது.. கரூர் தாந்தோன்றி மலையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விஜய்யின் பிரச்சார வாகனம் எடுத்துவரப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் அந்த வாகனத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.. விசாரணைக்காக 12-ம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அவரின் பிரச்சார வாகனம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.. மேலும் விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
41 பேர் உயிரிழப்பு தொடர்பாக விஜய் வரும் 12-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.. விஜய்யிடம் கரூர் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.. அதற்கு விஜய் அளிக்கும் பதிலை பொறுத்து தான் அவரிடம் எத்தனை நாட்கள் விசாரணை நடக்கும் என்பது தெரியவரும்.
Read More : “அண்ணே.. அனுபவத்துல சொல்றேன்..!! காங்கிரஸை மட்டும் நம்பாதீங்க”..!! விஜய்யை எச்சரித்த விஜயபிரபாகரன்..!!



