Breaking : திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும்.. நீதிபதி அதிரடி உத்தரவு..

thiruparamkuntram

திருப்பரங்குன்றம் தீப வழக்கில், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார்.. மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..


இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க் கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.. ஆனால் இந்த மனு நேற்று விசாரணைக்கு வரவில்லை.. இதனால் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது..

அதன்படி தீபத்தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் நேற்று பிற்பகல் நடந்தது.. தீபம் ஏற்றுவதற்கு தேவையான மண் பானை, நெய், திரி, சூடம் ஆகியவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன..

இதனிடையே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் கோயில் பதினாறுகால் மண்டபம் பகுதியில் கூடி கந்தசஷ்டி கவசம் பாராயணத்தில் ஈடுபட்டனர்.. மாலை 4 மணியளவில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபம் ஏற்றும் பொருட்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன.. மாலை 6.05 மணியளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது..

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்று கூறி மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்..

இந்த நிலையில் இந்த அவமதிப்பு வழக்கு இன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதி “ திருப்பரங்குன்றம் வழக்கை நேற்றைய தினம் அரசு இன்னும் சென்சிட்டிவாக கையாண்டு இருக்கலாம்.. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் உடல் மொழியும் ரசிக்கும்படியாக இல்லை.. ஜி.ஆர் .சுவாமி நாதன் என்ற தனி நபருக்கு மரியாதை அளிக்க வேண்டாம்.. நீதிக்கு மரியாதை அளியுங்கள்..” என்று தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர், காவல் ஆணையர் 10 நிமிடத்தில் காணொளி மூலம் ஆஜராக நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.. தொடர்ந்து சில நிமிடங்களில் காணொளி மூலம் ஆஜரானார்.. அப்போது நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் எனமதுரை ஆட்சியர், காவல் ஆணையருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.. காவல்துறை மீது மிகுந்த மரியாதை உள்ளது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்..

நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் மதிக்காமல் இல்லை.. பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் தான் 144 தடை உத்தரவை போட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அப்போது திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் இன்றே திருப்பரங்குன்ற மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.. 10 பேர் சென்று மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்..

Read More : கோயிலில் ஒன்றாக தரிசனம் செய்த முன்னாள் & இந்நாள் அமைச்சர்கள்..! அதிமுகவில் அடுத்த விக்கெட்டை தட்டி தூக்கும் திமுக?

RUPA

Next Post

தீபத்தூணை எல்லைத் தூண் என்று கூறும் அரசு வழக்கறிஞருக்கு அறிவு இருக்கா? நயினார் காட்டம்!

Thu Dec 4 , 2025
திருப்பரங்குன்றம் தீப வழக்கில், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார்.. மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.. இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க் கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.. ஆனால் இந்த மனு நேற்று விசாரணைக்கு […]
Nainar nagendran 2025

You May Like