இந்த ஆண்டில் (2025) மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும் என முன்பே அறிவிக்கப்பட்டது. அதில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் அடங்கும். ஏற்கனவே ஒரு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ்ந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இம்மாதத்தில் (செப்டம்பர்) நிகழ உள்ளது.
அதாவது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம், செப்டம்பர் 21ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று தான் நிகழ்கிறது. இது சர்வ பித்ரு அமாவாசை நாளில் அமைவதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்த கிரகணத்தின் மறுநாள் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது.
இந்த சூரிய கிரகணம் இரவு 11 மணிக்கு தொடங்கி, அதிகாலை 3.23 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பகுதி சூரிய கிரகணமாகும். இந்த கிரகணம் இரவில் நிகழ்வதால், இந்தியாவில் இது தெரியாது. அதேபோல் இந்த சூரிய கிரகணம், இந்தியப் பெருங்கடல், தென் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்பிரிக்கா, மெலனேசியா, நோர்போக் தீவு, அட்லாண்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல், பாலினீசியா, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன் போன்ற பகுதிகளில் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : புரட்டாசி மாதத்தின் முதல் நாளே இவ்வளவு சிறப்புகளா..? பெருமாளை எப்படி வழிபட்டால் பலன் கிடைக்கும்..?