திருமண கொடுமைக்கு எதிரான சட்டம் லிவ்-இன் உறவுகளுக்கும் பொருந்தும் : கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!

divorce1

சட்டப்படி ஒரு பெண்ணை செய்யாவிட்டாலும், ஒரு ஆண் ஒரு பெண்ணை தவறாக நடத்தினால், அவர் சட்டப்படி கணவர் அல்லாவிட்டாலும், அவருக்கு திருமண கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு தொடர முடியும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள்:

498A IPC (இப்போது BNS 85, 86) என்பது சட்டப்படி செல்லுபடியாகும் திருமணங்களுக்கு மட்டும் பொருந்துவதாகக் கொள்ளக்கூடாது. இந்த சட்டம், செல்லாத திருமணம், நிலுவையில் ரத்து செய்யக்கூடிய திருமணம், திருமணத்தின் பண்புகளை கொண்ட லிவ்-இன் போன்ற உறவுகளுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் விளக்கியுள்ளது.

நீதிபதி சுராஜ் கோவிந்தராஜ் “ அரசியலமைப்பு பிரிவு 498A-வில் வரும் “கணவர்” என்ற சொல் கண்டிப்பாக சட்டப்படி திருமணமான ஆண் ஒருவரை மட்டுமே குறிக்கவில்லை.
திருமணத்தின் அடையாளங்கள் இருக்கும் எந்த உறவிலும், அந்த ஆண் ‘கணவன் போன்றவர்’ எனக் கருதப்படலாம். மிரட்டல், தொந்தரவு, உடல்/மன உளைச்சல் போன்ற கொடுமைக்கான சட்ட நிபந்தனைகள் நிரூபிக்கப்பட்டால், 498A குற்றம் பொருந்தும்.

வழக்கின் பின்னணி

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஒரு ஆண் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது நடந்துவரும் குற்றவியல் விசாரணையை ரத்து செய்யும்படி அவர்கள் மனு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

பெண் தனது புகாரில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.. அதாவது தனது லிவ் – இன் பார்ட்னர் தன்னை திருமணமான மனைவியாக நம்ப வைத்த பின், திருமண கொடுமை வரதட்சணை கோரிக்கை, போன்ற துன்புறுத்தல்கள் செய்யப்பட்டதாக கூறினார். மேலும், தன்னை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர் என்றும் அப்பெண் புகார் செய்திருந்தார்.

அந்த பெண் 2010-ல் குற்றஞ்சாட்டப்பட்ட ஆணுடன் லிவ்-இன் உறவில் வாழத் தொடங்கினார்.. 2010 முதல், அவர்கள் பல இடங்களில் கணவன்-மனைவி போலவே இணைந்து வாழ்ந்தனர். 2016-இல், அப்பெண் ஷிமோகா காவல்துறையில் புகார் அளித்தார். முதலில், போலீஸ் அதை திருட்டு வழக்கு எனப் பதிவு செய்தது. பின்னர், பெண் வழங்கிய கூடுதல் வாக்குமூலங்கள் அடிப்படையில், போலீஸ் திருமண கொடுமை, மற்றும் வரதட்சணை தொடர்பான பிரிவுகளையும் சேர்த்தது.

    மேலும் அதே ஆண்டில், பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில், பெண் மீண்டும் வரதட்சணை துன்புறுத்தல், மேலும் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் ஆகியவற்றைப் பற்றி கூறினார். இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையா என்பதைக் காவல்துறை விசாரணை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் வெறும் ‘சட்டப்படி திருமணம் இல்லை’ என்ற காரணத்தால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியது.

    பெங்களூருவில் போலீஸ் பதிவு செய்த வழக்கு

    பெங்களூரு போலீசார் கணவன் அல்லது அவரது குடும்பத்தினர் செய்யும் கொடுமை, கொலை முயற்சி, மிரட்டல், ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்திருப்பது மிகக் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.

    “498A என்பது சட்டப்பூர்வமாக திருமணமான பெண்ணுக்கு மட்டுமே பொருந்தும்.
    நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை, எனவே அந்தப் பெண் 498A பிரிவு கீழ் வழக்கு தொடுக்க முடியாது. எங்களுடைய உறவு என்பது கணவன்-மனைவி உறவு அல்ல, வெறும் லிவ் இன் உறவு தான்.. அதாவது, சட்டப்படி திருமணம் இல்லை என்பதால் “திருமண கொடுமை” பிரிவு பொருந்தாது என அந்த ஆண் தரப்பு வாதிட்டது..

    “நான் ஏற்கனவே வேறு ஒரு பெண்மணியை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்.
    எனக்கு அந்த திருமணத்தில் ஒரு மகளும் இருக்கிறாள். இதன் மூலம்,
    எனவே புகார் அளித்த பெண் எனது மனைவி இல்லை” என்று வாதிட்டு 498A தவிர்க்க முயன்றார்.

    உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு

    குற்றஞ்சாட்டப்பட்டவரின் அனைத்துக் காரணங்களையும் கடுமையாக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதி மேலும் “ ஒரு உறவு திருமணத்திற்குச் சமமான அமைப்பில் இருந்தால், பெண் திருமணமானவளாக நம்பப்பட்டிருந்தால், மற்றும் அவர் மீது கொடுமை நடந்தது என குற்றச்சாட்டுகள் உள்ளன என்றால், 498A அல்லது அதன் மாற்று பிரிவுகள் பொருந்தும். “சட்டப்படி திருமணம் இல்லை” என்று சொல்லி குற்றத்திலிருந்து தப்ப முடியாது. ஒரு திருமணம் சட்டப்படி செல்லாதது அல்லது ரத்து செய்யக்கூடியது என்ற காரணத்தால், பெண்மணிக்கு இந்தச் சட்டத்தின் பாதுகாப்பை மறுக்க முடியாது.

    ஒரு ஆண், ஒரு பெண்மணியை “நான் உன்னை சட்டப்படி திருமணம் செய்துள்ளேன்” என்று நம்பவைத்த பின், பின்னர் அந்தப் பெண்ணுக்கு கொடுமை, துன்புறுத்தல் அல்லது வரதட்சணை அடிப்படையிலான தொல்லை அளித்தால், அத்தகைய ஆண் “இது செல்லுபடியான திருமணம் இல்லை” என்று கூறி 498A-யிலிருந்து தப்ப முடியாது. தாவது,
    பெண்மணியை ஏமாற்றி திருமணமானவர்கள் போல நடந்து கொண்ட பிறகு கொடுமை செய்தால், திருமணம் சட்டப்படி செல்லுபடியாக இல்லாவிட்டாலும் 498A-க்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டியது தான்.

    ஒரு பெண்மணி தன்னை ஒரு ஆண் திருமணம் செய்ததாக நம்பியபடி வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அவர் மீது கொடுமை நடந்தால் 498A-சட்டப்பிரிவுகளை பயன்படுத்தலாம்.” என்று தெரிவித்தார்..

    Read More : அசத்தல்..! AI ஆசிரியை ரோபோவை உருவாக்கிய 17 வயது மாணவர்; வீடியோ வைரல்!

    RUPA

    Next Post

    சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை...! பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்...!

    Sun Nov 30 , 2025
    வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் […]
    cyclone Alert 2025

    You May Like