சிவகங்கை இளைஞர் மரணம் தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை, பரப்புரை இன்று தொடங்கி வைக்கிறேன்.. மொத்தம் 45 நாட்கள் நடைபெற உள்ளது. பாஜக அரசால் தமிழும், தமிழ்நாடும் பாதிக்கப்படுவதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறது.. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மத்திய அரசு மறுக்கிறது.. திமுக தேர்தலுக்கு தயாராகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.” என்று தெரிவித்தார்.
அப்போது மடப்புரம் இளைஞர் மரணம் தொடர்பான கேள்வி பதிலளித்த அவர் “ திருப்புவனம் இளைஞர் மரண விவகாரத்தில் தகவல் தெரிந்து உடனே அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எடுத்துவிட்டது. தவறு செய்தவர்கள் கைது செய்யப்படிருக்கிறார்கள்.. இன்று காலை கூட காவல்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Read More : அடிப்பதற்கு எதற்கு போலீஸ்..? யார் உத்தரவின் பேரில் இது நடந்தது? நீதிபதிகள் சரமாரி கேள்வி..