இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் இமெயில் (Email) இல்லாமல் இருப்பது சாத்தியமே இல்லை. தகவல் பரிமாற்றத்துக்கேற்ப, பணியாளர்களிடமோ மாணவர்களிடமோ இமெயில் என்பது கட்டாய தேவையாகி விட்டது. பல்வேறு இணைய தளங்களிலும் பயன்பாடுகள் இருந்தாலும், Gmail தான் உலக அளவில் முன்னணியில் உள்ளது. தற்போதைய கணக்குப்படி, உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான ஜிமெயில் கணக்குகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில், Gmail தனது பயனர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் “Manage Subscriptions” (மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன்). இந்த டேப்பின் மூலம் உங்கள் இன்பாக்ஸில் தேவையில்லாமல் குவியும் நியூஸ் லெட்டர்கள், விளம்பர மெயில்கள், டீல்ஸ் போன்றவை அனைத்தையும் தனியாக வகைப்படுத்த முடியும். இதன் மூலம் அவசியமற்ற மெயில்களை எளிதாக நிர்வகிக்க முடிகிறது.
பயன்கள் என்ன?
* நியூஸ் லெட்டர்கள் மற்றும் விளம்பர மெயில்களை விரைவாக கண்டறிய முடியும்.
* தேவையற்ற மெயில்களை முடக்க (unsubscribe) செய்வது எளிதாகும்.
* முக்கியமான தகவல்கள் மட்டும் இன்பாக்ஸில் தெளிவாக தெரியும்.
* மொபைல் மற்றும் இணைய தள இடைமுகங்களில் பயன்படுத்தும் போது அழுத்தம் குறையும்.
* உங்களது மெயில் அனுபவம் சீரானதும், சுத்தமானதுமாக மாறும்.
இச்சிறப்பம்சம் தற்போது சிலருக்கு மட்டும் (beta) வழங்கப்பட்டு வருகிறது. முழுமையாக அனைவருக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதை பெற்றுள்ள பயனர்கள் இது மிகுந்த நன்மை தரும் மாற்றம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
Read more: கோவை நீலகிரி தான் டார்கெட்.. தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு..!! – வானிலை ஆய்வு மையம்