உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள தொழில் நகரப் பகுதியில் விவாகரத்து பெற்ற பெண்ணான ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது 7 வயது மகளின் எதிர்காலத்திற்காகவும், தனது தனிமைக்குத் துணையாகவும் சக ஊழியரான அர்ஜுனை நேசித்தார். மனைவியை இழந்த அர்ஜுன் மீது ரேகா வைத்தது உண்மையான காதல். ஆனால் அர்ஜுனுக்கோ, அது வெறும் உடல் இன்பத்திற்காகவும், பணப் பேராசைக்காகவும் போடப்பட்ட ஒரு கொடூரத் திட்டம் என்பது ரேகாவுக்கு தெரியவில்லை.
இருவருக்கும் இடையே நீடித்த உறவில், ரேகா திருமணத்திற்காக விடுத்த கோரிக்கைதான் இந்தச் சம்பவத்தின் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. குழந்தை உள்ள உன்னைத் திருமணம் செய்ய முடியாது என மறுத்த அர்ஜுன், ரேகாவுடன் இருக்கும் அந்தரங்கக் காட்சிகளை ரகசியமாகப் படம் பிடித்து, அவற்றை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளான்.
அர்ஜுனின் முதல் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றதற்கும் இவனது இதே வக்கிரப் புத்திதான் காரணம் என்பது விசாரணையில் அம்பலமானது. ஒருகட்டத்தில் திருமணத்திற்காக ரேகா விடுத்த மிரட்டல், அர்ஜுனை பயப்பட வைத்தது. தனது ஆபாச இணையதள வியாபாரம் மற்றும் கௌரவம் பாதிக்கப்படும் என அஞ்சிய அவன், ரேகாவை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன், கான்பூர் அருகே உள்ள ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிக்கு ரேகாவை அழைத்துச் சென்ற அர்ஜுன், அங்கு உல்லாசமாக இருந்த பின்னர் திடீரென கல்லை எடுத்து அவர் தலையில் தாக்கியுள்ளான். ரேகா உயிரிழந்ததும், அங்கேயே இரண்டடி ஆழ குழி தோண்டி அரைகுறையாகப் புதைத்துவிட்டு தப்பியோடினான்.
ஆனால், காட்டில் இருந்த விலங்குகள் உடலைத் தோண்டி சிதைத்ததால் துர்நாற்றம் பரவி, போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. முகம் அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்ட உடலை, ரேகாவின் செல்போன் தரவுகள் மற்றும் அர்ஜுனுடனான உரையாடல்களை வைத்துக் காவல்துறை துப்பு துலக்கியது.
கைது செய்யப்பட்ட அர்ஜுனின் மொபைலை சோதித்தபோது, கொலையின் கொடூரத்தை விட அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. ரேகாவின் விருப்பத்திற்கு மாறாகப் பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்த வீடியோக்களையும், அவர் வலியால் துடித்த காட்சிகளையும் அர்ஜுன் விற்றுப் பணம் பார்த்துள்ளான். தற்போது அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சைபர் கிரைம் போலீசார் அந்த வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read More : இனி அலைச்சல் கிடையாது..!! விண்ணப்பித்த சில மணி நேரத்தில் பயிர்க்கடன்..!! தமிழ்நாடு முழுவதும் அமல்..!!



