கள்ளக்காதலியின் அந்த இடத்தில் ஓங்கி விட்ட காதலன்..!! கணவனுடன் சேர்ந்து பலே திட்டம்..!! தண்டவாளத்தில் சிதைந்து கிடந்த உடல்..!! திருச்சியில் அதிர்ச்சி

Love 2025

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (50). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கும், இவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியில் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரியும் லட்சுமி (45) என்பவருடன் ரமேஷ்குமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.


சம்பவம் நடந்த முந்தைய நாள் இரவு, மாரியம்மன் கோயில் அருகே ரமேஷ்குமாரும், லட்சுமியும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த ரமேஷ்குமார், லட்சுமியின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனால் அவமானமடைந்த லட்சுமி, வீட்டுக்குச் சென்று தனது கணவர் வீரமுத்துவிடம் (52) நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

உடனடியாக வீரமுத்து, ரமேஷ்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். சண்டை முடிந்த சிறிது நேரத்தில், ரமேஷ்குமார் தனது மைத்துனரின் மகன் ரோகித்சர்மா வீட்டுக்குச் சென்று செல்போன் ஒன்றை வாங்கிச் சென்றார்.

அவர் ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் ரோகித் சர்மா ரமேஷ் குமாரை தேடிச் சென்றபோது, வீரமுத்துவின் வீட்டின் எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத்தில், தலை உள்ளிட்ட பாகங்களில் கத்திக் குத்து காயங்களுடன் ரமேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, போலீஸார் ரமேஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற போலீஸார், வீரமுத்துவின் வீட்டிலிருந்து தலை மற்றும் சில இடங்களில் கத்திக் குத்துக் காயங்களுடன் கிடந்த வீரமுத்துவையும் மீட்டுத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ரமேஷ்குமார், வீரமுத்து வீட்டுக்கு மீண்டும் சென்றபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் மாறி மாறி கத்திக் குத்து நடந்துள்ளது. இதில், வீரமுத்துவின் மனைவி லட்சுமியும் கட்டையால் ரமேஷ்குமாரை தாக்கியுள்ளார். இதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தக் கொலையை மறைப்பதற்காக, வீரமுத்துவும் லட்சுமியும் சேர்ந்து ரமேஷ்குமாரின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளனர். தற்போது வீரமுத்து மற்றும் லட்சுமி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read More : நடிகர் தாடி பாலாஜிக்கு என்ன ஆச்சு..? ICU-வில் அனுமதி..!! உடனே ஃபோன் போட்ட விஜய்..!!

CHELLA

Next Post

டேய்.. சீக்கிரம் வாடா..!! சிறுவன் மீது வந்த விபரீத ஆசை..!! அடிக்கடி உல்லாசம் அனுபவித்த இளம்பெண்..!! கடைசியில் எதிர்பாரா ட்விஸ்ட்..!!

Sat Sep 27 , 2025
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் ஒரு திருமணமான 24 வயதுப் பெண், மைனர் சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில், அந்தப் பெண்ணே தன்னைப் பாதிக்கப்பட்டவர் போல் காட்டிக்கொண்டு, அந்த சிறுவன் மீது பொய்யான பாலியல் புகாரைப் பதிவு செய்திருந்தார். ஆனால், காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. காவல் நிலைய அதிகாரி லட்சுமண் சுதார் அளித்த தகவலின்படி, 2 மாதங்களுக்கு […]
Sex 2025 1

You May Like