கேரளாவில் இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, காதலன் தன்னை ஏமாற்றி உல்லாசமாக இருந்ததாக கடிதம் எழுதி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், அங்கமாலி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கும், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ரமீஸ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இளம்பெண் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், காதலிக்கும் போது மதம் மாற கட்டாயப்படுத்த மாட்டேன் என்று காதலன் ரமீஸ் கூறியுள்ளார். மேலும், இருவருமே அவரவர் மதங்களைக் கடைபிடிப்போம் தெரிவித்துள்ளார். இதனால், அந்த இளம்பெண் திருமணத்திற்கு தயாரான நிலையில், திடீரென அவரை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.
மேலும், இவர்களின் காதல் விவகாரம் ரமீஸின் குடும்பத்தினருக்கும் தெரியும் என்பதால், அவர்களும் மதம் மாற கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால், திருமணத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளம்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற ரமீஸ், நீ மதம் மாற தேவையில்லை என கூறியுள்ளார். பின்னர், அவரிடம் ஆசைவார்த்தை கூறி ஆசைதீர உல்லாசமாக இருந்துள்ளார்.
பின்னர், அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததும், நீ கட்டாயம் மதம் மாற வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்த திருமணம் நடக்காது என்றும் கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த இளம்பெண், கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இளம்பெண் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.
அதில், தனது காதலன், அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். மேலும், மதம் மாற சொல்லி தன்னை தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணின் தாய் தனது மகளின் மரணத்திற்கு ரமீஸ் தான் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.