கட்சிக்கொடி விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவப்பு, மஞ்சள் நிறத்திலான கொடியை தவெக பயன்படுத்த தடை கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் “ சிவப்பு, மஞ்சள் நிறத்தில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன அமைப்பின் கொடி உருவாக்கப்பட்டது.. இந்த சபையின் வர்த்தக முத்திரையாக பதிவு இது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழும் பெறப்பட்டது..
இந்த சபையின் முதன்மை நிர்வாகிகள், ஊழியர்கள், முகவர்கள், வாரிசுகள் ஆகியோர் மட்டுமே இந்த முத்திரையை பயன்படுத்த முடியும்.. வேறு எந்த ஒரு நபரும் இந்த வர்த்தக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.. ஆனால் சமீபத்தில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும் இதே நிறத்தை கொண்டுள்ளதால், இந்த கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.. ” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது வர்த்தக முத்திரை என்பது, சரக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.. எப்படி அரசியல் கட்சிக்கு பொருந்தும் என்று கேள்வி எழுப்பினார்.. அப்போது மனுதாரர் தரப்பு, வர்த்தக முத்திரை, சரக்கு மட்டுமில்லாமல் சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையின் கீழ் இந்த முத்திரை பொருந்தும் என்று விளக்கம் அளித்தார்.. இதையடுத்து இந்த மனு தொடர்பாக மற்றும் அக்கட்சி தலைவர் 2 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
Read More : அடுத்த முறை அமித்ஷா தமிழகம் வந்தால் அதிமுக இரண்டாக உடையும்.. அடித்து சொல்லும் திமுக முக்கிய புள்ளி..