உடல் எடையை குறைக்கும் மேஜிக் பானம்..!! ஆப்பிள் சீடர் வினிகரை இப்படி பயன்படுத்தி பாருங்க..!! தொப்பையே இருக்காது..!!

Apple Seed Vinegar 2025

வரும் 2026இல் உடல் எடையை குறைக்க திட்டமிடுபவர்களுக்கு ஆப்பிள் சீடர் வினிகர் (Apple Cider Vinegar) ஒரு வரப்பிரசாதமாக அமையலாம். இதனை நம்முடைய தினசரி வாழ்க்கை முறையில், குறிப்பாக இரவு நேரப் பழக்கவழக்கத்தில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைப்பதில் ஆச்சரியமான மாற்றங்களை ஏற்படுத்தும். ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள்களை நசுக்கி நொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் போது ஆப்பிளில் உள்ள சர்க்கரை சத்துக்கள் முதலில் ஆல்கஹாலாகவும், பின்னர் அசிட்டிக் அமிலமாகவும் மாறுகின்றன. இந்த அமிலம்தான் எடையை குறைப்பதற்கும், கொழுப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், சருமத்தை பொலிவாக்குவதற்கும் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.


உடல் எடையை குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் எவ்வாறு உதவுகிறது என்பதை அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இது தேவையற்ற உடல் பருமனை குறைக்கப் பெரிதும் உதவுகிறது. ஆய்வு ஒன்றின்படி, இதனைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு குறுகிய காலத்திலேயே உடல் எடை குறைவதோடு, இடுப்பைச் சுற்றியுள்ள சதைப்பகுதியும் கணிசமாக குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னால் இதனை அருந்துவது, நள்ளிரவில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கும்போது, அது வயிறு நிறைந்த உணர்வை தரும். இதனால் தேவையற்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை தடுத்து, எடையை முறையாக பராமரிக்க முடியும்.

மேலும், உடலில் சர்க்கரை அளவு அடிக்கடி ஏறி இறங்குவதுதான் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். ஆப்பிள் சீடர் வினிகர் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகிறது. இரவு உணவிற்கு பிறகு இதனை அருந்துவது இரவு நேரப் பசியை தணிப்பதோடு, நல்ல உறக்கத்திற்கும் வழிவகுக்கிறது. இதில் கலோரிகள் மிகக் குறைவு என்பதால், அதிக சர்க்கரை கொண்ட பானங்களுக்கு மாற்றாக இதனைப் பயன்படுத்தலாம். அதேபோல், இது வயிற்றில் அமிலத் தன்மையைச் சற்று அதிகரித்துச் செரிமானத்தை வேகப்படுத்துகிறது.

ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால், இதனை ஒருபோதும் நேரடியாக குடிக்க கூடாது; எப்போதும் தண்ணீரில் கலந்து மட்டுமே அருந்த வேண்டும். இல்லையெனில் அது பற்களின் எனாமல் மற்றும் தொண்டை பகுதியைச் சேதப்படுத்த வாய்ப்புள்ளது.

முதன்முதலாகப் பயன்படுத்துபவர்கள் மிகக் குறைந்த அளவில் தொடங்கி, உங்கள் உடலுக்கு அது ஒத்து வருகிறதா என்று பார்த்துவிட்டுப் பிறகு அளவை மெதுவாக அதிகரிப்பது சிறந்தது. இத்தகைய எளிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த வரும் 2026இல் உங்கள் எடை குறைப்பு இலக்கை எளிதாக அடையலாம்.

Read More : BREAKING | ஆந்திராவில் பயங்கரம்..!! நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த ரயில் பெட்டிகள்..!! பயணிகளின் நிலை என்ன..?

CHELLA

Next Post

லிவ்-இன் பார்ட்னருக்கு வந்த விபரீத ஆசை..!! கள்ளக்காதலன் மீது மகள்களை ஏவிவிட்ட தாய்..!! விடிய விடிய நடந்த பகீர் சம்பவம்..!!

Mon Dec 29 , 2025
லக்னோவின் பரபரப்பான கிரீன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல ஆசிரியர் சூரிய பிரதாப் சிங் (35), தனது லிவ்-இன் பார்ட்னர் மற்றும் அவரது இரு மகள்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தையே அதிரவைத்துள்ளது. ஆசிரியர் சூரிய பிரதாப், ரத்னா (46) என்ற விதவை பெண்ணுடன் ஏற்பட்ட உறவால் தனது உயிரைப் பறி கொடுத்துள்ளார். டியூஷன் படிக்க வந்த ரத்னாவின் மகள்களே, தங்களது தாயை திருமணம் […]
Sex 2025 7

You May Like