அதிமுகவின் அன்வர் ராஜா திமுக இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இபிஎஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்.
அதிமுக அமைப்பு செயலாளரும், அதிமுக முன்னாள் எம்.பியான அன்வர் ராஜா, அதிருப்தியில் இருந்து வந்தார் அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் இருந்தே அவர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார்.. மேலும் சிஏஏ, வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்தார்.. இதனால் அதிமுக தலைமைக்கும் அன்வர் ராஜாவுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்தது.. 2019-ல் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்த போதே இது தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார்..
இந்த நிலையில் அன்வர் ராஜா திமுக இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக அவர் இன்று அண்ணா அறிவாலத்திற்கு சென்ற நிலையில், அவரை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. அவர் இன்னும் சற்று நேரத்தில் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.