மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம், வாடா தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கணவர் இல்லாத நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, அவருக்கு அறிமுகமான நபர் ஒருவர் ஏமாற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று இரவு, அந்தப் பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில், அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர், அப்பெண்ணின் கணவர்தான் அழைப்பதாக கூறி, ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே இருந்த மற்றொரு நபரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் அந்தப் பெண் கதறித் துடித்த நிலையில், இருவரும் அவரை மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரண்டு நபர்களையும் உடனடியாக கைது செய்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் இந்த செயல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



