அடுத்த 2 மணி நேரம் இடி மின்னலுடன் மழை வெளுக்க போகுது.. இந்த 5 மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்..!! – வானிலை அலர்ட்..

Rain 2025

அடுத்த இரண்டு மணி நேரம் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: கணவன் திட்டியதால் கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து கண்முன் உல்லாசம்..!! திடீரென ஆணுறுப்பை அறுத்து..!! குமரியில் நடந்த பயங்கரம்..!!

English Summary

The Meteorological Department has predicted that there is a possibility of heavy rain in 5 districts of Tamil Nadu for the next two hours.

Next Post

மதுரையில் பயங்கரம்..!! போலீஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!! துடிதுடித்து பலியான பிஞ்சு குழந்தை..!!

Wed Nov 12 , 2025
மதுரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (26), தனது மனைவி சத்யா (23) மற்றும் 3 வயது மகன் அஸ்வின் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அனஞ்சியூர் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து தனது அண்ணி ஈஸ்வரியையும் (40) அழைத்துக் கொண்டு […]
Madurai 2025 1

You May Like