தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

daswanth 1

சென்னை போரூரில் 2017-ஆம் ஆண்டு 7 வயது சிறுமி ஹாசினி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து ஹாசினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.


போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தை ஹாசினி விளையாடி விட்டு அபார்ட்மெண்ட்டுக்குள் வருவது பதிவாகி இருந்தது. ஆனால், உள்ளே வந்தவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து அபார்ட்மெண்டில் குடியிருந்து வரும் தஷ்வந்த் என்ற இளைஞர் இரவு 9 மணியளவில் கையில் ஒரு பையுடன் வெளியே சென்றுவிட்டு, அரை மணி நேரத்தில் திரும்பியது தெரிய வந்தது.

இதையடுத்து தொடர்ந்து தஷ்வந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹாசினிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். அவரை கைது போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து தீர்ப்பு அளித்தார். தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து, தஸ்வந்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தஸ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன் தஷ்வந்தை விடுதலை செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது.. இந்த நிலையில் இந்த சீராய்வு மனு இன்று நீதிபதி விக்ரம் நாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்..

Read More : Flash : வங்கக்கடலில் உருவானது டிட்வா புயல்.. இன்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கும்..!

RUPA

Next Post

சாலையில் பணம் கிடந்தால் அதை எடுக்கலாமா? அது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?

Thu Nov 27 , 2025
நடந்து செல்லும் போது சாலையில் திடீரென பணம் கிடைத்த அனுபவத்தை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம்.. ஆனால் அந்த நேரத்தில், பலருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். இந்தப் பணத்தை நாம் எடுக்கலாமா? கூடாதா? அது சுபமானதா? அது அசுபமானதா? என்ற கேள்வி மனதில் எழுகிறது. இருப்பினும், ஜோதிடத்தின் படி, சாலையில் காணப்படும் பணத்திற்கு சிறப்பு அர்த்தங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சாலையில் பணம் கிடைத்தால், அது லட்சுமி தேவி உங்களிடம் மகிழ்ச்சி […]
image 2025 11 8ed22fd51ef5528fdee417ddffe501c4 1 1

You May Like