பீமவரம் அருகே யனமதுரு கிராமத்தில், உலகில் எங்கும் காண முடியாத வகையில் சிவபெருமான் தலைகீழாக காட்சி தரும் அதிசய திருக்கோவில் அமைந்துள்ளது. பார்வதி அம்பிகை மற்றும் குழந்தை முருகனுடன் இணைந்து அருள் புரியும் இந்த தலம், எமனுக்கே சக்தி வழங்கிய தியாகபூமி என தலபுராணம் புகழ்கிறது.
முன்னொரு காலத்தில், சம்பாசுரன் என்ற அரக்கன், பிரம்மனால் பல வரங்களை பெற்றுவிட்டு, தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். அஷ்டதிக்கபாலர்களில் எமனை தவிர அனைவரையும் தோற்கடித்த சம்பாசுரன், இறுதியில் எமபுரியையே கைப்பற்றி, தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் எமன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்.
அப்போது, சிவன் யனமதுருவில் உள்ள இத்தலத்தில் ஆழ்ந்த தியானத்தில் தலைகீழாக இருந்தார். ஈசனின் தியானத்தை கலைக்க எமனால் இயலவில்லை. அந்த வேளையில் அன்னை பார்வதி காட்சி அளித்து, எமனுக்கு சமர் வெற்றிக்கான சக்தியை அளித்தாள். அதன் மூலம் எமன் சம்பாசுரனை வீழ்த்தி, மீண்டும் சிவபார்வதியை தரிசிக்க வந்தார். அதற்கான நினைவாகவே இங்கு இறைவன் இன்று வரை தலைகீழாக காட்சி தருகிறார்.
இக்கோவிலின் சிறப்பம்சங்கள்:
* கருவறையில் சிவன் லிங்க ரூபமாக இல்லாமல், உருவமாக தலை கீழாக காட்சி தருகிறார்.
* தலை பூமியில் பதித்து, பாதங்களை மேலே தூக்கி நிறுத்தி, தலைகீழாக அமர்ந்துள்ளார்.
* அருகிலேயே அன்னை பார்வதி, குழந்தை முருகனை மடியில் ஏந்தி தாய்மையின் திருவுருவில் காட்சி தருகிறார்.
* ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம், கண்டம், நவகிரக தோஷங்கள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இத்தலம் கருதப்படுகிறது.
* எமனே பூஜித்த தலம் என்பதால் எம பயம் நீங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
* அழகான கிராமம், சுதை வேலைபாடுகளுடன் கம்பீரமாக நிலவும் கோவில், பக்தர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
Read more: Vastu Tips: மறந்தும் இந்த கடவுளின் புகைப்படங்களை வீட்டில் வைக்க கூடாது..!! ஏன் தெரியுமா..?