11 முகங்கள்.. 22 கைகள்.. முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம் கிடைக்கும் அதிசய தலம்..!! எங்கு இருக்கு..?

temple 2

ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை என்னும் இடத்தில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் அதிசய கோலமாக முருகப் பெருமான் 11 முகங்கள், 22 கைகளுடன் காட்சி தருகிறார். இது போன்ற திருக்கோலத்தை வேறு எங்கும் காண முடியாது.


பொதுவாக பெரும்பாலான முருகன் கோயில்களில், ஒரு முகத்துடன் காணப்படும் முருகப்பெருமான், சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று முகங்களுடன் அருள் தருகிறார். ஆனால் இங்கே குண்டுக்கரையில், 11 முகங்களோடும், 22 கரங்களோடும் ஒரு விஸ்வரூப நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதுவே இத்தலத்தின் பிரம்மாண்ட விசேஷம்.

சூரபத்மனை வதம் செய்யும் முன், முருகன் இத்தலத்தில் வந்து விஸ்வரூபம் எடுத்ததாகப் புராணங்களில் கூறப்படுகிறது. அந்த விஸ்வரூபமே இங்கு நிரந்தரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகன் இங்கே குழந்தையாகவோ, சிவபெருமானின் மடியில் அமர்ந்திருப்பதாகவோ இல்லாமல், குன்றின் உச்சியில் நின்று, பிரணவ மந்திரத்தின் ரகசியத்தை சிவபெருமானுக்கே உபதேசிக்கும் உருவத்தில் காணப்படுகிறார். சிவபெருமான் அந்த உபதேசத்தை காதுகொடுத்தபடி நின்று பார்வையிடும் வகையில் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், ராமநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதி சுவாமிமலை முருகனை தரிசித்தபின், இரவில் கனவில் முருகன் தோன்றி வழிகாட்டியதாக வரலாறு கூறுகிறது. அந்தக் கனவின் அடிப்படையிலேயே, குண்டுக்கரையில் இருந்த பழைய சிலையை அகற்றிவிட்டு, இந்த வியக்கவைக்கும் 11 முக, 22 கரங்களுடன் கூடிய புதிய சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தார். அதனால்தான், சுவாமிமலை முருகனைப் போலவே இங்கும் “சுவாமிநாதன்” என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.

இந்த கோயில் ஒரு சாதாரண முருகன் கோயில் அல்ல. ஆன்மீக ரீதியில், சிற்பக் கலையில், வரலாற்று பின்புலத்தில் அனைத்திலும் தனித்துவம் கொண்டது. ராமநாதபுரம் மாவட்டத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், இந்த அதிசய தலத்தையும் நிச்சயமாக தரிசித்து மகிழுங்கள்.

Read more: “அவன் தான் சார் என் பொண்ண கொன்னுட்டான்” வரதட்சணை கொடுமையால் புதுமணப் பெண் உயிரிழப்பு..!!

English Summary

The miraculous Murugan temple with 11 faces and 22 hands.. Do you know where it is?

Next Post

Dream11 இனி வெறும் கேமிங் செயலி அல்ல!. ரூ.10-லிருந்து தங்கத்தில் முதலீடு செய்யலாம்!. Dream Money செயலி அறிமுகம்!.

Tue Aug 26 , 2025
இந்தியாவின் முன்னணி ஃபான்டஸி விளையாட்டு தளமான Dream11-இன் தாய் நிறுவனமான Dream Sports, ஆன்லைன் கேமிங் தடையை தொடர்ந்து, புதிய தனிப்பட்ட நிதி செயலியான Dream Moneyயை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஃபான்டஸி விளையாட்டு தளமான Dream11-இன் தாய் நிறுவனமான Dream Sports, புதிய தனிப்பட்ட நிதி செயலி ஒன்றை Dream Money என்ற பெயரில் சோதனை செய்து வருகிறது என Moneycontrol வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. […]
dream money app 11zon

You May Like