மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில், மருத்துவ சக்தி மிக்க தெய்வீகத் தலமாக பக்தர்களிடையே பரவலாக நம்பப்படுவதோடு, உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் முக்கியமான சிவன் கோவிலாக திகழ்கிறது. இங்கு வழிபட்டால் தோல் நோய்கள், இரத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் கூடக் குணமடையும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
வைத்திய+ஈஸ்வரன் என்ற பெயரிலேயே, இவ்விடம் மருத்துவ கடவுள் இருக்கிறார் என நம்பப்படுகிறது. இந்த கோவில், நவகிரகத் தலங்களில் செவ்வாய் பகவானுக்குரிய பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது. செவ்வாய் கிரகம் உடலில் இரத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்துவதாகவும் நம்பப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள புனித குளத்திற்கு சித்தாமிர்த தீர்த்தம் என்று பொருள். எவர் ஒருவர் இந்த கோவில் குளத்தில் குளிக்கிறாரோ அவரின் நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலுக்கு சென்று விபூதி வாங்கி சாமிக்க காணிக்கையாக கொடுத்தால் நீண்ட நாள் தீராமல் இருக்கும் நோய்கள், என்ன நோய் என்றே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நோய்கள் குணமாவதாக சொல்லப்படுகிறது.
மேலும், இந்தக் கோவிலின் சிறப்பு ‘நாடி ஜோதிடத்தில்’ கூட வெளிப்படுகிறது. முனிவர் அகத்தியர் எழுதி வைத்த ஓலைச்சுவடிகளில், ஒருவரது கை விரல் ரேகையை அடிப்படையாக கொண்டு, அவர்களின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், முந்தைய பிறவி உள்ளிட்ட தகவல்களை வாசிக்கப்படுகிறது.
விதியால் அழைக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த ஓலைச்சுவடி கிடைக்கும் என்பது ஜோதிடர்களின் நம்பிக்கை. மருத்துவ அதீத சக்தி, ஆன்மிக விசுவாசம், ஜோதிட அதிசயங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் தரும் வைத்தீஸ்வரன் கோவில், பக்தர்களுக்கான நம்பிக்கையின் கரையான புண்ணிய தலமாக விளங்குகிறது.
Read more: பொதுத்துறை வங்கியில் மேனேஜர் வேலை.. ரூ.93,960 சம்பளம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?