உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மட்டுமல்லாமல், உங்களுக்கு எப்போது, எப்படி மரணம் நிகழும் என்பதைக் கூட துல்லியமாக சொல்லும் ஒரு கோவில் நம் தமிழ்நாட்டில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது வேறு எந்த கோவிலும் இல்லை, உலகப் புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் தான்.
பொதுவாக வைத்தீஸ்வரன் கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற நாடி ஜோதிடம் தான். இன்று வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முனிவர்கள் மற்றும் ரிஷிகளால் ஓலை சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை அகத்திய முனிவரால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒருவரின் விதி எப்படி இருக்கும் என்பதை அவர் பிறப்பதற்கு முன்பே எழுதி வைக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது.
இப்படி ரிஷிகளால் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள், அதாவது ஏடுகள், யார் ஒருவருக்கு நாடி ஜோதிடம் பார்க்கும் விதி இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மற்றவர்களுக்கு ஏடுகள் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஏடுகளை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படுவது, வெறும் கைவிரல் ரேகைகள் மட்டும்தான். ரேகையின் மூலம் ஏடு எடுக்கப்பட்டு, அதில் உள்ள நபரின் பெயர், பெற்றோர் பெயர் போன்ற சில முக்கிய தகவல்களை சரிபார்த்து, அதன் பிறகுதான் துல்லியமான வாழ்க்கை விவரங்கள் வாசிக்கப்படுகின்றன.
நாடி ஜோதிடத்தில் பல பிரிவுகளாகப் பலன்கள் சொல்லப்படுகின்றன. இதில் ஆயுள் காண்டம் என்ற ஒரு பிரிவும் உள்ளது. இதில் ஒருவரின் வாழ்நாள், மற்றும் மரணம் எப்போது, எப்படி ஏற்படும் போன்ற விவரங்களைக்கூடச் சொல்கிறார்கள். பலரும் இந்தத் தகவல்கள் மிகச் சரியாக இருப்பதாக உறுதிப்படுத்துகின்றனர்.
வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடத்தால் மட்டுமல்லாமல், இங்குள்ள சிவபெருமான் ஆலயத்தாலும் தனிச்சிறப்புப் பெறுகிறது. இங்குள்ள சிவனுக்கு வைத்தீஸ்வரன், வைத்தியநாத சுவாமி என்ற பெயர்கள் உள்ளன. வைத்தீஸ்வரன் என்றால் நோய்களைக் குணமாக்கும் கடவுள் என்று பொருள். நீண்டகாலமாகத் தீராத உடல் நோய்கள் தீர ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். இது இந்து மதத்தின் நவகிரக பரிகாரத் தலங்களில் செவ்வாய் கிரகத்திற்குரிய தலமாக விளங்குவது கூடுதல் சிறப்பு.
இக்கோவிலில் உள்ள குளத்தில் (தீர்த்தம்) நீராடினால் பாவங்கள் நீங்கும், தோல் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. குறிப்பாக, குளத்தில் வெல்லத்தைக் கரைத்து வழிபட்டால் உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் தீராத நோய்கள் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும், இங்குள்ள ஜோதிடர்கள் மற்றும் புரோகிதர்கள், இந்த ஏடுகளில் உள்ள பிரச்சினைகளுக்குத் தக்க பரிகாரங்களையும் (தானம் அளிப்பது, மந்திரங்கள் சொல்வது, ராசி கற்கள் அணிவது) வழங்கி, இறைவனின் அருளால் பாதுகாப்பு கிடைப்பதாக உறுதி அளிக்கின்றனர்.
Read More : சூப்பர் திட்டம்…! பிரதமரின் சூரிய சக்தி வீடு… வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் இல்லை…!



