தக் லைஃப் திரைப்படம் வெளிநாடுகள் மற்றும் மற்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே வெளியாகியுள்ள நிலையில், சோஷியல் மீடியா முழுக்க அதன் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படத்துக்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள “சுகர் பேபி, ஜிங்குச்சா, விண்வெளி நாயகா, முத்த மழை” போன்ற பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் பூர்த்தி செய்ததா..? இல்லையா..? என்பதை தற்போது பார்க்கலாம்.
தக் லைஃப் ட்விட்டர் விமர்சனம் : “முதல் பாதி மற்றும் இடைவேளை அல்டிமேட்டாக உள்ளதாகவும், கமலின் ராக் சாலிட் கம்பேக் இந்த தக் லைஃப்” என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ”அப்படியே செக்கச் சிவந்த வானம் படம் பார்த்தது போல உள்ளது. தக் லைஃப் நத்தை வேகத்தில் மெதுவாக நகர்கிறது. முதல் பாதியில் சீட்டில் அமர முடியவில்லை. கமல் முத்தக் காட்சிகளையும், கில்மா காட்சிகளையும் காட்டி படத்தைக் காப்பாற்றுகிறார்” என பதிவிட்டுள்ளார்.
”இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல்” என சிம்பு சொல்லும் இடமெல்லாம் மாஸாக இருப்பதாக நெட்டிசன் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார். கமலின் மிரட்டலான நடிப்பு மற்றும் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ள விதம் தக் லைஃப் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. கமல்ஹாசனுக்கு கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய பைசா வசூல் படமாக அமையும் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.