1000 வெள்ளத்தைக் கடந்து கம்பீரமாய் நீருக்குள் மூழ்கி இருக்கும் முருகன் கோயில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

kurukuthurai temple

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவே, வருடத்தின் பாதி நாட்கள் நீருக்குள் மூழ்கி காட்சி தரும் அதிசய முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. “குறுக்குத்துறை முருகன் கோவில்” என அழைக்கப்படும் இத்தலம், திருச்செந்தூர் திருத்தலத்திற்கு நிகரான ஆன்மிகச் சிறப்பை பெற்றதாக பக்தர்கள் கருதுகின்றனர்.


பொதுவாக முருகன் கோவில்கள் மலை மேல் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளதென்பதும், குறுக்குத்துறை கோவில் மட்டும் ஆற்றின் நடுவே இருப்பதென்பதும் வியப்பூட்டும். இக் கோவில் பழங்காலத்தில் “சந்தனமலை” எனும் மலையின் மீது இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த கோவிலின் சிறப்பில், திருச்செந்தூர் மூலவர் சிலைக்கு பயன்படுத்தப்பட்ட கற்கள், குறுக்குத்துறையிலிருந்தே எடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அதனால், திருச்செந்தூருக்கு வேண்டிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற பலரும் இத்தலத்திற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பல வெள்ளப் பெருக்குகளை கடந்து இன்று வரை சேதமின்றி தாமிரபரணியின் நடுவே இந்தக் கோவில் நிலைத்திருக்கிறது. ஆற்றின் வெள்ளத் தாக்கத்தை எதிர்த்து, கோவிலின் மேற்பகுதி படகின் அடிப்பகுதியை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது முக்கிய சிறப்பு.

குறுக்குத்துறை பகுதியில், ஆற்றின் இரு கரைகளிலும் முருகன் கோவில்கள் உள்ளன. இதனால், மூழ்கும் கோவிலை “கீழக்கோவில்”, அருகிலுள்ள மற்றொரு கோவிலை “மேலக்கோவில்” என மக்கள் அழைக்கின்றனர். வெள்ளப் பருவங்களில் உற்சவ மூர்த்தி மேலக்கோவிலுக்கு மாற்றப்பட்டு, வழக்கமான பூஜைகள் அங்கு நடத்தப்படும்.

குறுக்குத்துறையில், நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மனுக்கான சன்னதிகளும் உள்ளன. நெல்லையப்பர் கோவிலில் திருவிழா நடைபெறும் போது, குறுக்குத்துறை முருகன் பெருமான் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் முருகன் சிலையை வடிவமைத்த சிற்பி, அதே போல வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிலையை உருவாக்கிய இடமுமாக குறுக்குத்துறை விளங்குகிறது. இக்கழிகளில் உள்ள தெய்வீக கற்கள், மிகுந்த ஆன்மிக விசை கொண்டவை என அறியப்படுகிறது. இதனால்தான் இவ்விடம் “திருவுருமாமலை” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோவில் குறித்த தகவல்கள் சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் பரவி, சுற்றுலா பயணிகளையும், ஆன்மிக ஆர்வலர்களையும் பெரிதும் ஈர்த்து வருகிறது. மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போதும், இந்தக் கோவில் கம்பீரமாக நீரினுள் திகழ்வது பக்தர்களை பெரும் பக்திச் சூழலுக்கு இட்டுச் செல்கிறது.

Read more: ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை.. காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்..!! தொடரும் அவலம்..

Next Post

Holiday: வார இறுதி விடுமுறை... தமிழகம் முழுவதும் 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு...!

Fri Jul 4 , 2025
வார இறுதிநாள் விடுமுறையை முன்னிட்டு, ஜூலை 4, 5 தேதிகளில் தமிழகம் முழுவதும் 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு செல்லவும் ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஜூலை 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து […]
TN Bus 2025 1

You May Like