“2026 தேர்தலில் பாஜக கூட்டணியை ஜீரோ ஆக்க வேண்டும்.. தமிழ்நாடா? NDA-வா பார்த்துவிடுவோம்” முதல்வர் ஸ்டாலின் சவால்..!

cm stalin n

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக இளைஞரணி என்றால் பிரம்மாண்டம், உதயநிதி என்றால் அதை விட பிரம்மாண்டம்.. விருதுநகரில் மாநாடு நடத்தில் அடுத்த தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்பது வரலாறு.. 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது நமது இலக்கு.. நான் ரெடி.. சாதனை படைக்க நீங்கள் தயாரா? பெயரளவில் இளைஞர்களை இயக்கத்தில் சேர்த்தால் போது என்று மட்டும் உதயநிதி செயல்படவில்லை.. தந்தை பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கை வாரிசுகளாக திமுக இளைஞரணியினர் உருவாகி வருகின்றனர்..

நமக்கெல்லாம் கல்வி எதற்கு என்று ஒதுக்கி வைத்திருந்தனர்.. நமக்கெல்லாம் வேலைகள் கிடைக்காது.. அந்த அநீதியை இட ஒதுக்கீடு மூலம் உடைத்தெறிந்தோம்.. இப்போது நீட் தேர்வு போன்ற தடைகளை உருவாக்குகின்றனர்..

சமூக நீதி, மொழி உணர்வு, இன உணர்வு இவை தான் நமது அடிப்படை கொள்கைகள்.. மாநில கட்சிகளே இருக்கக் கூடாது என பாஜக செயல்படுகிறது.. அவர்களால் நெருங்க முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.. சுயமரியாதையை வீழ்த்தும் கூட்டத்தை எதிர்க்க நீங்கள் தேவை..

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது.. மொழியை அழித்தால் இனத்தை அழிக்கலாம் என்ற குறிக்கோளுடன் செயல்படுகின்றனர்.. அவர்களை எதிர்க்க நீங்கள் வேண்டும்..

நாம் தான் 7-வது முறையாக வெற்றி பெற போகிறோம்.. நம் எதிரிகளுக்கும் இதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்று மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.. கடைசி வரை வாக்குகளை சேகரிக்க வேண்டும்..

ஒன்றிய அரசின் பட்டியலாக இருந்தாலும், தேசிய ஊடகங்கள் வெளியிடும் பட்டியல் ஆனாலும் சரி. எல்லாவற்றிலும் தமிழ்நாடு தான் டாப். தமிழ்நாடு தான் சூப்பர் ஸ்டார்.. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது..

இந்தியாவிலும் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள் இருக்காது.. எல்லாவற்றிலும் நாம் நம்பர் 1-ஆக இருந்தாலும் பட்ஜெட் என்றால் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் கிடையாது.. தேர்தலை வைத்தாவது ஏதேனும் அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.. ஆனால் வழக்கம் போல் ஒன்றும் கிடையாது.. அவர்கள் நமக்கு கொடுத்தது வெறும் ஜீரோ தான்.. அப்ப நாமும் தேர்தலில் அவர்களுக்கு அதை தான் திருப்பி கொடுக்க வேண்டும்.. 2024 நாடாளுமன்ற தேர்தலை போலவே 2026 சட்டமன்ற தேர்தலிலும் என்.டி.ஏ கூட்டணியை ஜீரோ ஆக்க வேண்டும். பாஜகவும் அதிமுகவும் இதுவரை இல்லாத தோல்வி அடையும்.. திமுக இதுவரை இல்லாத வெற்றியை பெறும்..” இந்த தேர்தலில் தமிழ்நாடா அல்லது என்.டி.ஏவா என்று பார்த்துவிடுவோம்..” தெரிவித்தார்..

Read More : “அரசியல் அறிவே இல்லாத சில அட்டைகள் உளறினாலும்…” இபிஎஸ், விஜய்யை விமர்சித்த உதயநிதி..!

RUPA

Next Post

உங்களுக்கு ரூ. 1 கோடி கொடுத்தாலும், இந்த 7 இடங்களுக்கு செல்லாதீங்க..! சாணக்கியர் ஏன் இப்படி சொன்னார்?

Sat Feb 7 , 2026
ஆச்சார்ய சாணக்கியர் மனித வாழ்க்கையை ஆழமாக ஆய்வு செய்த ஒரு மாபெரும் ஞானி. ஒரு மனிதன் வாழ்க்கையில் எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்பது குறித்தும் அவர் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியபடி, இந்த 7 இடங்களுக்குச் செல்லக்கூடாது. ஒவ்வொரு அழைப்பும் மரியாதையைக் குறிப்பதில்லை. சில சமயங்களில், நமது நேரத்தையும், உழைப்பையும், மன அமைதியையும் வீணடிக்கும் அபாயம் உள்ளது. அதனால்தான் சாணக்கியர் சில இடங்களைப் பற்றி முன்கூட்டியே […]
chankaya 1

You May Like