கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினார்.. மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம், துரோகத்தை எப்படி ஏற்க முடியும் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்து மீண்டும் கூட்டணியில் இணைந்தார்.. இதை தொடர்ந்து பியூஷ் கோயல், டிடிவி தினகரன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய பியூஷ் கோயல் “ பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே, வாசன், டிடிவி தினகரன் என எங்கள் கூட்டணியில் உள்ள அனைவரும் ஊழல் மற்றும் நிர்வாக திறமையற்ற திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.. இந்த திமுக அரசு தமிழக மக்கள் மீது, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெருமை மீது தாக்குதல் நடத்துகிறது..
நாங்கள் ஒரே குடும்பமாக வேலை பார்த்து, இந்தியாவுக்கு எதிரான திமுக கூட்டணியை தோற்கடிப்போம்.. மு,க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோரின் ஊழல்கள் மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்படும்.. என்.டி.ஏ கூட்டணி தமிழக மக்களுக்கும் நல்லாட்சியை வழங்கும்..
தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெருமை உலகம முழுவதும் சென்றடையும்.. தமிழ்நாட்டு மக்களுக்காக நல்லாட்சியை வழங்குவோம்.. தினகரன் மீண்டும் கூட்டணியில் இணைந்து கூட்டணியை வலுப்படுத்தி உள்ளார்.. ஜெயலலிதா வழங்கிய நல்லாட்சியை தமிழ்நாட்டிற்கு எங்கள் கூட்டணி வழங்கும் என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன் “ மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.. தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக எங்களின் பங்காளி சண்டை எல்லாம் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, விட்டுக்கொடுப்பவர்கள் என்றும் கெட்டுப்போவதில்லை என்ற சான்றோர் மொழிக்கேற்ப எல்லாவற்றையும் மறந்துவிட்டு, அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளோம்..
இந்த கஞ்சா மாடல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளோம்.. இந்த தேர்தலில் என்.டி.ஏவின் வெற்றிக்காக அமமுக தொண்டர்கள் உழைப்பார்கள்.. 2021-ல் தவறிய அம்மாவின் ஆட்சி, 2026-ல் நிச்சயம் அமைப்போம்..” என்று தெரிவித்தார்..
Read More : Flash : மீண்டும் பாஜக கூட்டணியில் இணையும் அமமுக.. டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!



