புத்தாண்டு முடிந்து நாளையும் விடுமுறை..!! சற்றுமுன் வந்த குட் நியூஸ்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Holiday 2026

கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஜனவரி 2) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டும் நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்த உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. இருப்பினும், வங்கிகள் மற்றும் அவசர காலப் பணிகளில் ஈடுபடும் அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொதுத்தேர்வுகள் அல்லது முக்கியத் தேர்வுகள் ஏதேனும் இருந்தால், அவை மாற்றமின்றித் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் ஜனவரி 10-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டம் முழுவதும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாணுமாலய சுவாமி கோயிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய மார்கழித் திருவிழா, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் பத்தாம் நாளான நாளை அதிகாலையில் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான பெரிய தேர் உட்பட 3 தேர்களும் திருவீதி உலா வரும் நிகழ்வு தொடங்கும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்துத் தேர் இழுக்கும் இந்த வைபவத்திற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டுச் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

Read More : புத்தாண்டு பிறந்ததும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வந்து விழுந்த நல்ல செய்தி..!! பழைய ஓய்வூதியத் திட்டம்..!! ஜன.6இல் வெளியாகிறது அறிவிப்பு…?

CHELLA

Next Post

நாட்டு மக்களுக்கு மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதி..!

Thu Jan 1 , 2026
2025 ஆம் ஆண்டு முடிந்து, நாம் 2026 ஆம் ஆண்டு என்ற புத்தாண்டுக்குள் நுழைந்துவிட்டோம். புத்தாண்டு பிறக்கும்போது, ​​அரசாங்கங்கள் மக்களைப் பாதிக்கும் புதிய விதிகளை அமல்படுத்துகின்றன. இப்போது, ​​புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி முதல் சில புதிய முடிவுகள் அமலுக்கு வந்துள்ளன. இவை குறித்து நாட்டின் அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டும். புதிய விதிகளைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தால், நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும். […]
electronics

You May Like