தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவற்றுடன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் குதித்துள்ளதால் அரசியல் சதுரங்கம் விறுவிறுப்படைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தங்களின் தாய் கட்சியான அதிமுகவின் கொள்கை மீதும், எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதும் கொண்ட நம்பிக்கையின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக இணைந்தவர்கள் தெரிவித்தனர்.
Read More : சொந்த சித்தியுடன் உடலுறவு..!! உண்மை தெரிந்ததும் முகம் சுளிக்க வைத்த கணவனின் செயல்..!! ஆடிப்போன கிராமம்..!!



