உத்தரகாண்டில் டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த ஹெலிகாப்டரில் 7 பேர் பயணித்த நிலையில், 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சார் தம் என்று சொல்லப்படும் கேதர்நாத் யாத்திரையின் 4 புனித தலங்களில் ஒன்றுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர் அதிகாலையில் புறப்பட்ட நிலையில், குழந்தை உட்பட 6 பேர் பயணித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் வனப்பகுதி அருகில் சென்றிருந்த போது, திடீரென மாயமாகி இருக்கிறது. அதன் பின்னர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்.
தகவல் அறிந்து உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் தெரியவில்லை.. இந்த சம்பவத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். “ஹெலிகாப்டர் விபத்து குறித்து வருத்தமான செய்தி கிடைத்தது. பயணிகளின் பாதுகாப்பிற்காக பிராத்தனை செய்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தத் துயரச் சம்பவம், அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 270 பேர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 (AI171) ரக விமானம், டேக்-ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களில் ஒருவர் தவிர அனைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: செக்..! இனி கற்கள், ஜல்லி & எம்.சாண்ட் எடுத்து செல்ல அனுமதிச்சீட்டு கட்டாயம்…!