விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் டிஆர்பியில் டாப் இடத்தில் இருந்து வருகிறது. அதிலும் கடந்த வாரத்தில் இந்த சீரியலில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்றைய எபிசோட்டில், வானதியை வீட்டில் விட்டு வந்த பாண்டியன், தனது வீட்டிற்கு வந்து நடந்ததை கூறினார். இன்றைய எபிசோட்டில் சோழன் வீட்டில் எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன், வானதி வீட்டில் நடந்ததை சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார்.
வானதி தைரியமாக சொல்லி புகார் அளித்ததை நினைத்து எல்லோருமே பெருமையாக பேசு கொண்டிருக்கிறார்கல். அப்போது நிலா, நானும் அந்த மாதிரி செய்திருக்கலாம் என்று சொல்கிறார். சோழன், நடக்காத வரை சந்தோஷம் என்று மனதுக்குள் நினைத்து சந்தோஷம் கொள்கிறார். அதற்குப்பின் சேரனுக்கு திருமணம் செய்வது பற்றி நிலா, நடேசன் இடம் பேசுகிறார். ஆனால், அவர் அதைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளவே இல்லை.
பின் பாண்டியன், சோழன், பல்லவன் மூவருமே ஜாலியாக பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது சேரன் கல்யாணத்தை பற்றி நிலா பேசுகிறார். பெண் பார்க்கும் விஷயத்தில் தீவிரமாக இறங்க சொல்கிறார். அதன் பிறகு பைக்கில் சோழனும் பாண்டியனும் வந்து கொண்டிருக்கையில், சேரன் காய்கறி வாங்கும் பெண்களிடம் கூட்டு வைப்பது எப்படி என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
இதை பார்த்த சோழனும் பாண்டியனும் நம்ம அண்ணன் இப்படி இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும் என பேசிக்கொண்டு சேரனை அங்கிருந்து அழைத்து செல்கிறார்கள். இன்னொரு பக்கம் பல்லவன், நிலா இருவருமே பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு பெண் பல்லவனை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த நிலா, பல்லவனிடம் விசாரிக்கிறார். அத்ற்கு பல்லவன், எனக்கு எதுவும் தெரியாது, அது இந்த ஏரியா பொண்ணு இல்ல, நானே இன்று தான் பார்க்கிறேன் என்று கூறி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Read more: கரூரில் விஜய் மீது செருப்பு வீசியது யார்? திடீர் திருப்பம்.. வெளியான புதிய வீடியோ..