தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்..
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நாளைய தமிழக முதலமைச்சர் விஜய் மக்கள் சக்தி மூலமாக 2026-ல் அவர் முதலமைச்சராக அரியணையில் அமர்வார்..
விஜய்யை மக்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டுவிட்டனர்.. அதனால் தவெக மக்கள் சக்தியாக மாறி உள்ளது.. தவெகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.. இந்த மக்கள் சக்தி மூலம் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு, நேர்மையான புனிதமான ஆட்சியை உருவாக்குவதற்கு அவர் புறப்பட்டிருக்கிறார்.. அவர் 2026-ல் மக்கள் சக்தியின் மூலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்வார்.
தமிழகத்தில் எந்த சக்தியாலும் மக்கள் சக்தியை வீழ்த்த முடியாது.. விஜய் தனக்கு ஆண்டுக்கு 500 கோடி சம்பளம் வந்தால் கூட அதை தூக்கி எறிந்து விட்டு புனித ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருதற்காக துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.. அதில் நான் இடம்பெற்றிருக்கிறேன்.. இவர்களுடன் சேர்ந்து என் மூச்சிருக்கும் வரை அவரை முதலமைச்சராக ஆகும் வரை பாடுபடுவேன்.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி என்பது உறுதி..” என்று தெரிவித்தார்..
Read More : “புலிக்கு வாலா இருக்கலாம்.. எலிக்கு தலையா இருக்கக் கூடாது..” செங்கோட்டையன் குறித்து ஜெயகுமார் விமர்சனம்..!



