2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வழக்கம் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவே அதிக சான்ஸ் உள்ளது. இப்படி பலமுனை போட்டி ஏற்படும் நிலை உள்ள நிலையில், தமிழகத்தில் மக்கள் மனநிலையைப் பற்றிய 'Vote Vibe'
கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், திமுக ஆட்சிக்கு எதிராக 32% பேர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதில் 41 பேர் திமுக அரசுக்கு எதிராகவும், 31% பேர் ஆதரவாகவும் கருத்து கூறியுள்ளனர். வயது அடிப்படையில், இளைஞர்கள் திமுக ஆட்சியிடம் அதிக அதிருப்தியுடன் இருக்கின்றனர். 25-34 வயதுக்குட்பட்டவர்களில் 40% பேர் திமுக அரசின் செயல்பாடுகளிடம் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 18-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களில் 29% பேர் அரசை எதிர்த்தனர். 45-54 வயதினரிலும் 32% பேர் எதிர்ப்பு பார்வையையே தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் CM ஸ்டாலின் அரசின் வளர்ச்சி திட்டங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியை 42 % பேர் வரவேற்றுள்ளனர் எனவும் 34 % பேர் வேண்டாம் என்றும் கருத்து கூறியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 12% பேர் ஆதரவு அளித்து 3 வது இடத்தை கொடுத்துள்ளனர்.
Read more: MBBS, BDS படிப்புகளுக்கு ஜூலை 21 முதல் கலந்தாய்வு.. கல்லூரிகளின் கட்டண விவரங்கள் வெளியீடு..!!