இந்த விஜய்யை மக்கள் ஒரு நாளும் கைவிட மாட்டார்கள்.. என்னப்பா நிற்பீங்க தானே..? விஜய் கேள்வி?

tvk vijay

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்..


மஞ்சளை வைத்து தான் நல்ல விஷயங்களை தொடங்குவார்கள்… மஞ்சள் என்றாலே தனி வைப் தான்.. நம்ம கொடியில் கூட வைப்ரண்டான மஞ்சள் இருக்கும்.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் இந்த ஈரோடு.. இந்த ஈரோடு மண், விவசாயத்திற்கு பெயர் போன மண்.. பெற்ற அம்மா தைரியம் கொடுத்தால் எதையும் சாதிக்க முடியும்.. அதே தைரியத்தை தான் என் அம்மா, அக்கா, தோழர்கள் என அனைவரும் எனக்கு கொடுத்துள்ளீர்கள்ள்.

இதை எப்படி கெடுக்கலாம் என்று, எப்படி விஜய் மீது அவதூறு பரப்பலாம்.. என்னென்ன சூழ்ச்சிகள் செய்யலாம் என்று சில சூழ்ச்சிகாரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.. ஆனால் எனது 10 வயது முதல் தமிழக மக்களுடன் உள்ள தொடர்பை யாராலும் கெடுக்க முடியாது.. எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கும் இந்த விஜய்யை மக்கள் ஒரு நாளும் கைவிட மாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.. என்னப்பா நிற்பீங்களா? உங்களை நம்பி தான் வந்திருக்கிறேன்.. வாழ்நாள் முழுவதும் உங்களுடன் நிற்பேன்.

பெரியாரும், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து.. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவு செய்து கொள்ளை அடிக்காதீர்கள்.. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கும் கும்பல் தான் திமுக.. களத்தில் இருப்பவர்களை மட்டும் தான் நாங்கள் எதிர்ப்போம்.. திமுகவுக்கு அவர்கள் கொள்ளை அடித்த பணம் தான் துணை.. எனக்கு இந்த மக்கள் துணை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை எல்லாம் சொன்னார்களே செய்தார்களா? திமுகவும் பிரச்சனைகளும் ஒன்று.. ” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

2026இல் தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய் தான்..!! அவர் கை காட்டுபவர்தான் MLA..!! செங்கோட்டையன் அதிரடி பேச்சு..!!

Thu Dec 18 , 2025
புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்டப் பயணமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சரளைப் பகுதியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திடல், தொண்டர்களின் வெள்ளத்தால் திணறி வருகிறது. நெடுஞ்சாலைப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய […]
Sengottaiyan 2025

You May Like