தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள ஒக்க நின்றான் மலை ராமர் கோயில் ராமாயணப் புராணங்களின் கதைப்பின்னணியால் பிரபலமானது. ராவணன் சீதாவை கடத்திச் சென்ற பின்னர், ராமர், லட்சுமணன், அனுமன் மற்றும் வானர படைகள் சீதாதேவியை தேடி இங்கு தங்கி இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
சீதாவைக் தேடி ராமர் ஒற்றைக் காலில் மலையின் மீது ஒக்கி நின்று பார்க்கும் காட்சியினால்தான் இந்த மலைக்கு “ஒக்க நின்றான் மலை” என பெயர் வந்ததாகப் சொல்லப்படுகிறது. மேலும், ராமர்–சீதா சம்பந்தமான பலச் சின்னங்கள் ஊர்களின் பெயர்களிலும் உருவாகியுள்ளன. சீதாதேவி பார்த்த மான் குத்தி ஓடியதால் “குத்தபாஞ்சான்” என்றும், மான் மாயமாகிய பகுதி “மாயமான் குறிச்சி” என்றும் ஊர் பெயர்கள் உள்ளனர்.
கோயில் அமைப்புகள் மற்றும் சிறப்புகள்: மலை அடிவாரத்தில் ராமர்–சீதாதேவி ஆலயம், அனுமன் சிலை அமைந்துள்ளன. நுழைவு வாயிலின் இரு புறத்திலும் இரண்டு பெரும் யானைகள் வரவேற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளன. திருப்பாற்கடலில் 7 குதிரைகள் பூட்டிய வாகனத்தில் சூரியநாராயணர், 16 அடி உயர விஸ்வ பிரம்மா சிலை, குரு வசிஷ்டர், அகத்திய முனிகள், கருடர், ஸ்ரீ கௌதமர், ஸ்ரீ பரத்வாஜர், ஹயக்ரீவர், வேதநாராயணர், விநாயகர், சரஸ்வதி, சப்தரிஷி, பசு சிலைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
இலங்கையில் போர் முடிந்து ராமர் அயோத்தி செல்லும்போது, சீதாதேவி அருந்த நீர் வேண்டும் எனக் கேட்ட காட்சியை தத்ரூபமாகக் கொண்ட சீதா தெப்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சிலைகள், விலங்குகள் மற்றும் பறவைகள் இடம்பெற்றுள்ளன.
மலைமேல் ராமர், சீதாதேவி, அனுமன், லட்சுமணன், முருகப்பெருமான், வள்ளி தெய்வானை, சிவபெருமான் லிங்க், விநாயகர், ஸ்ரீ கருப்பசாமி, கங்கை அம்மன், இசக்கியம்மன், பேச்சியம்மன், நாகராஜன், சித்திரபுத்திர நாயனார், காவல் தெய்வங்கள், நவகிரகங்கள் என அனைத்து கடவுளும் அமைந்துள்ளன.
ஒக்க நின்றான் மலை ராமர் கோயிலில் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிழா நடைபெறும். காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறும், அந்நேரம் அன்னதானமும் வழங்கப்படும். இயற்கை காற்றும், மூலிகை வாசமும் நிறைந்ததால் தியானம் செய்யும் பக்தர்களுக்கு சிறந்த இடமாகும்.
Read more: ‘ஹமாஸால் திருப்பி அனுப்பப்பட்ட 4 உடல்களில் ஒன்று பணயக்கைதியின் உடல் அல்ல..’ இஸ்ரேல் தகவல்..