“நான் போட்ட பொலிடிக்கல் பாம் எல்லா கூட்டணிகளும் வெடிக்குது.. ஸ்டாலின் சார் பதறுகிறார்..! விஜய் அட்டாக்..!

Vijay Stalin

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. எப்போதும் போல இந்த முறையும் திமுகவை விஜய் கடுமையாக சாடினார்.. அப்போது பேசிய அவர் “ சி.எம். சார் எப்போதும் தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று சொல்வார்.. ஆனால் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்புகளில் ஸ்டாலின் அவுட் ஆஃப் கண்ட்ரோல்.. தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்..


சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? முதலில் டிஜிபியை போடுங்கள்.. அப்புறம் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளை நான் கொடுக்கவே மாட்டேன்.. மக்களுக்காக எந்த எல்லைக்கும் சென்று போராட தயாராக இருக்கிறேன்.. தூய சக்தி தவெக, தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே.. விஜய் என்ன இவர்களை மட்டும் தான் எதிர்க்கின்றனர் என்று கூறுகின்றனர்..

இது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல்.. இங்கு யார் ஆட்சியில் இருக்கின்றனர்? யார் மக்கள் விரோத ஆட்சியை நடத்துவது? நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்றால் திமுகவை தான்.. மக்கள் டெலிட் செய்தவர்களை ஏன் எதிர்க்க வேண்டும்..? விஜய்யை நம்புறீங்களா? ஸ்டாலின் சாரை நம்புறீங்களா? இந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்கவிடாது..

ஒரு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒழுங்காக நடத்த தெரியவில்லை.. இதில் இவர்கள் உலக நாடுகளோடு போட்டிப் போடுகிறார்களாம்.. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று நான் பொலிட்டிகல் பாம், எல்லா கூட்டணிகளிலும் வெடித்துக் கொண்டிருக்கிறது.. ஸ்டாலின் சார் பதறுகிறார்.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று கூறுகிறார்.. உங்களுடன் நான் இருக்கிறேன்.. என்னுடன் நீங்க இருக்கிறீர்கள்.. நம்பிக்கை உடன் இருங்க வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்..

Read More : “என்னை போல் தனி ஆளாக கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் வாக்கு வாங்கும் தில்லு இருக்கா..?” திமுக, அதிமுகவுக்கு விஜய் பகிரங்க சவால்..!

RUPA

Next Post

மதமாற்றமோ அல்லது கலப்புத் திருமணமோ பிறப்பால் நிர்ணயிக்கப்பட்ட சாதியை மாற்றாது..! உயர்நீதிமன்றம் கருத்து..!

Fri Feb 13 , 2026
மத மாற்றம் அல்லது கலப்புத் திருமணமோ பிறப்பால் நிர்ணயிக்கப்படும் சாதியை மாற்றாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், பட்டியல் சாதியல்லாத ஒருவரை திருமணம் செய்திருந்த பின்னர், அவர் மீது நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் சாதிய அடிப்படையிலான அவமதிப்பு குறித்த புகாரை மையமாகக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார், 2024 பிப்ரவரி 10ஆம் தேதி […]
court judgement

You May Like