Just In : ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. காலையில் குறைவு.. மாலையில் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Jewels 2

சென்னையில் இன்று காலை ரூ.880 குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. குறிப்பாக கடந்த வாரம் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. இந்த வாரத்திலும் திங்கள், செவ்வாய் என 2 நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்தது.. பின்னர் மீண்டும் உயர்ந்த நிலையில், விஜயதசமி நாளான நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. ஆனால் மாலையில் விலை உயர்ந்தது..

அதே போல் இன்றும் காலையில் ரூ.880 குறைந்த தங்கம் விலை தற்போது மாலை உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ரூ.10,900க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.87,200க்கு விற்பனையாகிறது..

தங்கம் விலை இன்று காலை குறைந்த நிலையில் மாலையில் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதே போல் இன்று காலை குறைந்த வெள்ளி விலை மாலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.162க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,62,000 விற்பனையாகிறது.

Read More : அடிதூள்..! இனி 1 மணி நேரத்தில் காசோலையை பணமாக்கலாம்.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதி..!!

English Summary

Jewelers are shocked as the price of gold in Chennai, which fell by Rs. 880 this morning, has increased in the evening.

RUPA

Next Post

கரூர் துயரம்.. புஸ்ஸி ஆனந்த் ஜாமீன் மனு.. நீதிமன்றத்தில் காரசார வாதம்! தீர்ப்பு எப்போது?

Fri Oct 3 , 2025
தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக பல பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 3 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யபப்ட்டது.. மேலும் முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் […]
bussy anand

You May Like