தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ரூ.37,576-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..


இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,697-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து, ரூ.37,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,500-க்கு விற்பனையாகிறது..

RUPA

Next Post

முதல் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுத்த கணவன்..!! 2-வது மனைவி சண்டையிட்டதால் கரண்ட்ஷாக் கொடுத்து கொலை..!!

Fri Sep 30 , 2022
முதல் மனைவி வீட்டிற்கு சென்று வருவதைக் கேட்டு சண்டையிட்ட 2-வது மனைவியை தலையனை வைத்து அழுத்தியும் கரண்ட்ஷாக் கொடுத்தும் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். வடசென்னை பழையவண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் ஷாஜகான் (47). இவர் தோல் ஆடைகளைக் கொண்டு டெய்லர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஜெபினா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேலை பார்க்கும் இடத்தில் […]
Current Shock

You May Like